Posted by : kayalislam
Tuesday, 10 May 2011
யார் அந்த மைக்கேல் H.ஹார்ட்?உலக சாதனை படைத்த தலைவர்களை ஆய்வு செய்த அறிஞர் மைக்கேல் H.ஹார்ட் தான் எழுதிய THE HUNDRED என்று நூலில் முத்தான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முதல் தலைவராக பிரசுரித்தார் என்ற செய்தி அனேக மேடைகளில் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அதன் மூலம் அண்ணலுக்கு புகழ் உயருதுவதாக ஒருவன் கருதினால், அவனின் சிந்தனை சீர்செய்யப்படவேண்டும்.
ஏனெனில் முதல் நபராக முஹம்மது நபியை தேர்வு செய்யவில்லையென்றால் அந்த அறிஞர் மைக்கேல் H.ஹார்ட் என்பவரை யாருக்கு தெரியும்?
அறிஞர் மைக்கேல் H.ஹார்ட் புகழ் பெற்றது பெருமானை புகழ்ந்ததாலல்லவா? அது போன்றே அண்ணலை புகழ்ந்தவர்கள் புகழ் பெறுகின்றனர்.
குழந்தைகள் பிறந்தவுடன் அக்குழந்தையை நீராட்டி சுத்தப்படுத்துவதுண்டு. அப்படியே மாநபியவர்களையும் பிறந்த போதும் நீராட்டினார்கள். ஆனால் பூமான் நபியின் புனித மேனியில் பட்டு தண்ணீர் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டது.