Posted by : kayalislam
Friday, 6 May 2011
நேர் வழி தந்திடும் நாதா
நேசர் நபி மஹ்மூதா
பேர் புகழ் பெருகும் முனீரா
பயகம்பர் செய்யிது ஸாதாத்
எங்கள் பாவம் பொறுக்கும் ஹாமீம்
எங்கள் மீது இறங்கும் ஹாமீம்
என்றென்றும் மன்றாடும் ஹாமீம்
பயகம்பர் செய்யிது ஸாதாத்
காரண குருவான தூதே
காத்திமுன் நபியான வேதா
பூரணம் பொழியும் மஹ்மூதா
பூதலக் கருவான தூதே
ஆதி தந்தை ஆதம் தானும்
ஆவி சேர்ந்து கண் திறக்கையிலே
ஜோதி சுவர்க்கம் மீதில் உங்கள் பேர்
ஜொலிக்கக் கண்டு ஆனந்தம் கொண்டார்