Posted by : kayalislam
Thursday, 5 May 2011
ஆதியேகன் தூதரே ஜோதியாம் நபி தாஹாவே
நானும் காண நாளும் காண ஆசையாய் அழைக்கின்றேனே
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலுல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்
இருள் படிந்த இதயம் யாவும்
உங்கள் வரவால் ஒளிர்ந்தததே
அன்பே அருளே அழகே அமுதே
அஹ்மது யா நபி ஸலாம்
( ஆதியேகன் )
பொருள் விரிந்த புன்னிய வேதம்
உங்கள் வரவால் மிளிர்ந்ததே
பொங்கும் பொழிவே பூவின் உயிரே
பூமான் யா நபி ஸலாம்
( ஆதியேகன் )
பாவை இனமே பாவம் உங்கள்
வரவால் தானே நிமிர்ந்ததே
பரிவின் உருவே கனிவின் திருவே
ஹாத்தம் யா நபி ஸலாம்
( ஆதியேகன் )
பொன்னும் மணியும் யாவும் உங்கள்
வரவால் தானே மின்னுதே
சங்கை தாங்கும் சாந்தம் கமழும்
சர்தார் யா நபி ஸலாம்
( ஆதியேகன் )
விண்ணும் மண்ணும் மதியும் உங்கள்
வரவால் தானே மிளிர்ந்ததே
சொல்லும் செயலும் கந்தம் கமழும்
கண்மணி யா நபி ஸலாம்
( ஆதியேகன் )