Posted by : kayalislam
Friday, 6 May 2011
அண்ணல் உங்கள் அன்பை நாடி
எங்கள் மனம் ஏங்குது
எண்ணி எண்ணி வாடுது
யாராஸூலே எங்கள் யாமுஸ்தஃபா
நாயன் தன்னை நினைவாக
லாஇலாஹ இல்லல்லாஹ் என்போமே
மறவாமல் தொடராக
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்போமே
முஹம்மதுர்ரஸூல் முகம் காண
எங்கள் கண்கள் ஏங்குது
எண்ணி எண்ணி வாடுது
யாஹபீபே எங்கள் யாமுஸ்தஃபா
(அண்ணல்)
இருவிழிகளின் ஒளியெனவே
இலங்கும் இரஸூல் முஹம்மதரே
மதி ஒளியென புவியினிலே
மடமைகள் மாய்த்திட்ட போதகரே
மக்கம் தந்த மாநபியை
எங்கள் கண்கள் தேடுது
எண்ணி எண்ணி வாடுது
யாஹபீபே எங்கள் யாமுஸ்தஃபா
(அண்ணல்)
கஸ்தூரி மனம் கமழும்
உங்கள் திருமேனியை நாள் முழுதும்
கண்ணால் அதை பார்த்திடனும்
கவலைகள் மறந்திங்கு வாழ்ந்திடனும்
ஹாத்தமுன் நபியை காண
எங்கள் கல்பு ஏங்குது
எண்ணி எண்ணி வாடுது
யாஹபீபே எங்கள் யாமுஸ்தஃபா
(அண்ணல்)
எம் உடல் எங்கிருந்தாலும்
உள்ளம் உயிர் உங்களிடம்தானே
ஒரு நாள் உங்கள் ரவ்லாவை
நாடி வந்து நாட்டங்கள் சொல்வேனே
உலகம் போற்றும் உத்தம நபியை
எங்கள் உள்ளம் தேடுது
எண்ணி எண்ணி வாடுது
யாராஸூலே எங்கள் யாமுஸ்தஃபா
(அண்ணல்)
மஹ்ஷர் அதன் நாளினிலே
மாந்தர்கள் தவித்திடும் போதினிலே
மன்றாடியே காப்பவரே
மனித குல மாணிக்கம் எங்கள் நபியே
மனித புனித நபியை காண
எங்கள் மனம் ஏங்குது
எண்ணி எண்ணி வாடுது
யாராஸூலே எங்கள் யாமுஸ்தஃபா
(அண்ணல்)
உயிர் போகின்ற வேளையிலே
உங்கள் திருமுகம் தன்னை பார்த்திடனும்
உயர் கலிமா திக்ர் ஸலவாத்து
ஓதியே எங்கள் உயிர் பிரிந்திடனும்
அருள் புரியும் அண்ணல் நபியை
எங்கள் உயிர் தேடுது
எண்ணி எண்ணி வாடுது
யாராஸூலே எங்கள் யாமுஸ்தஃபா
(அண்ணல்)