Posted by : kayalislam
Thursday, 5 May 2011
காயல்பட்டணம் அல் முஹிப்புர் ரசூல் அல்லாமா அஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் சித்தீகி காதிரி கந்தஸல்லாஹு சிர்ரஹுல் அஜீஜ் அவர்களின் ஸலாம் பைத் :
அஸ்ஸலாமு அலைக்க முஸ்ஸலாமு அலைக்குமு
அஸ்ஸலாமு அலைக்க முஸ்ஸலாமு அலைக்குமு
மதி பிறந்ததோ - மாநிதி திறந்ததோ
என்கதி பிறந்ததோ வருக அஸ்ஸலாம் அலைக்க
( அஸ்ஸலாமு )
ஆதி தூதரே - அருளான வேதரே
என்ஆசை நாதரே வருக அஸ்ஸலாம் அலைக்க
( அஸ்ஸலாமு )
அகமகிழ்ந்ததே - ஒளிவால் நிறைந்ததே
என்உளம் குளிர்ந்ததே வருக அஸ்ஸலாம் அலைக்க
( அஸ்ஸலாமு )
கஸ்தூரி வாசமே - தினம் கமழ்ந்து வீசுமே
பலகாத தூரமே வருக அஸ்ஸலாம் அலைக்க
( அஸ்ஸலாமு )
மதியைப் பழித்தோரே - மாமறைகள் புகழ்ந்தோரே
என்மனதை கவர்ந்தோரே வருக அஸ்ஸலாம் அலைக்க
( அஸ்ஸலாமு )
அய்னில்லா அரபியே - மீமில்லா அஹ்மதே
அர்ஷலாவும் சிரசுடைய அண்ணலே ஸலாம்
( அஸ்ஸலாமு )
பளீர் முகத்தையே - நும் பவழ இதழையே
பார்த்தவர் மிகவும் பாக்கிய சாலியாவாரே
( அஸ்ஸலாமு )
காதலானேனே - உம்மைக்காண வந்தேனே
உங்கள் கதத்திலெப்ப வீழ்வதென்று கதறியழுதேனே
( அஸ்ஸலாமு )
காலை பிடித்தேனே - என் கண்ணில் வைத்தேனே
உங்கள் கருணைக் கரத்தாலெண்ணை காத்து இரட்சித்தருள்வீரே
( அஸ்ஸலாமு )
திங்களா முகம் - திவ்ய மங்களா குணம்
தமியே னென்னை தாபரித்து தாளைத் தாருமே
( அஸ்ஸலாமு )
பாவம் போகவே - பரிதாபம் நீங்கவே
பார் புகழும் உமது பொற்பாதம் தாருமே
( அஸ்ஸலாமு )