Posted by : kayalislam
Friday, 6 May 2011
நினைவு யாவும் உங்கள் மீது யாரஸூலல்லாஹ்
நீங்களின்றி நாங்களேது யாரஸூலல்லாஹ்
அணைந்திடாட உலக ஜோதியாய் தோன்றி
அகிலமெங்கும் ஒளி தெளித்த யாரஸூலல்லாஹ்
(நினைவு)
மதீனா நகர் கொரு நாள் நான் வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நபியென அருட்கடலில் நான் விழுவேன்
நபியே கதியென்றங்கே நான் அழுவேன்
எங்கள் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே
பிந்திடாமல் பிரிய வேண்டும் எங்கள் ரூஹுமே
கொஞ்சங் கூட பிந்திடாமல் பிரிய வேண்டும் எங்கள் ரூஹுமே
(நினைவு)
காணும் வரையில் கண்கள் தூங்காது
காதலினாலே உள்ளம் தாங்காது
வானில்லாமல் நிலம் வாடாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது
ஒளியை தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
உம்மத்தென்ற பெருமையோடு வந்து சேருவேன்
நபியே உங்கள் உம்மத்தென்ற பெருமையோடு வந்து சேருவேன்
(நினைவு)
உலகில் வாழ வந்த உயிர்கள் யாவும்
உம்மி ரஸூலே உங்கள் புகழ் பாடும்
அருளாய் வந்திறங்கும் மறை மூலம்
அல்லாஹ் போற்றும் மனித அனுகூலம்
இரண்டு வாழ்வின் பொருளை சொன்ன இதய தீபமே
இறுதி தூதராக வந்த இறையின் ஞானமே
எங்கள் இறுதி தூதராக வந்த இறையின் ஞானமே
(நினைவு)
சங்கையான இந்த மஜ்லிஸில் கூடி
சர்தார் முஹம்மதுங்கள் புகழ்பாடி
சல்லபார் நபிமேல் சலவாத்தோதி
ஷஃபாஅத் பரிந்துரையை தான் நாடி
வேண்டி நிற்கும் எங்கள் அனைத்து நாட்டம் யாவுமே
விரைவில் தீர்க்க வேண்டும் எங்கள் யாரசூலல்லாஹ்
எங்கள் நிலையை அறிந்து மிக விரைவில் தீர்க்க வேண்டும் எங்கள் யாரசூலல்லாஹ்
(நினைவு)