Posted by : kayalislam Saturday, 7 May 2011


பூமான் நபியை நான்தான் வளர்த்து வாலிபமாக்கினேன் என்று யாரும் கூறிவிட முடியாத படி, பிறப்பதற்கு முன்னரே பிதாவையும், அரும்பும் பருவத்தில் அன்னையையும் மரணிக்கச் செய்த இறைவனே ! அண்ணலை அரவணைத்து வளர்த்தான் . அண்ணலின் மூலம் அந்தப் புகழைத் தனக்கே சூட்டி மகிழ்கிறான் எல்லாம் வல்ல நாயன் .
கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கல்வி போதித்த பெருமையையும் அல்லாஹ் தனக்கே தேர்ந்தெடுத்துக் கொண்டான் . அன்னாலாருக்கு நானே ஆசிரியர் என்று , எந்த மனிதரின் நாவினாலும் வரமுடியாத வகையில் அந்தப் புகழுக்குரியவனாக அல்லாஹ் தன்னையே அறிமுகப்படுத்திக் கொண்டான் .

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ
அவனே தன் தூதரை நேர்வழியுடனும் , சத்திய மார்கத்துடனும் அனுப்பி வைத்தான் (அல்குர்ஆன் ஸூரா தௌபா:33)

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ
அவன் தான் உம்மிகளிடயே ஒரு தூதரை அவர்களிலிருந்தே
தோற்றுவித்தான் (அல்குர்ஆன் ஸூரா ஜும்மா:2)

இது போன்ற திருவசனங்களில் மூலம் அந்த ரஸூலை அனுப்பிய அல்லாஹ் தான் நான் என்று தன்னை அறிமுகப்படுத்தி , அண்ணலின் மூலம் புகழ் பெறுகிறான் அந்த புகழுக்குரிய நாயன் .

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததால் மக்கா புகழ் பெற்றது.

மாநபியை சுமந்ததால் மதீனா மணம் பெற்றது .

மாநபிக்கு அருளப்பட்டதால் அருள் மறை குர்ஆன் கீர்த்தி பெற்றது .

அண்ணலின் மார்க்கம் என்பதால் இஸ்லாம் எழுச்சி பெற்றது .

அண்ணலின் தோழர்கள் என்பதால் ஸஹாபிகள் நபிமார்களுக்கு அதுத்த சிறப்பைப் பெற்றனர் .

உத்தமநபியின் உம்மத்துக்கள் என்பதால்தான் உம்மத்தே முஹம்மதிய்யா உயர்வு பெற்றது .
பூமனின் பாதம் பட்டதால் தான் பூமி புகழ் பெற்றது .

வள்ளலின் பாடம் பட வேண்டும் என்று வானம் ஆசை பட்டதால் தான் இறைவன் மாநபியின் சந்திப்பை வானத்திலே வைத்தான் . அதன் மூலம் வானம் வருசை பெற்றது .

இப்படி அனைத்துப் புகழுமே அண்ணலைக் கொண்டு அமைத்து வைத்திருக்கிறான் அல்லாஹ் .
அவ்வாறிருக்க அண்ணலை நாம் புகழ்ந்து தான் அவர்கள் புகழ் உயர வேண்டும் என்று நினைப்பது அறிவீனமாகும் .

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Powered by Blogger.

Blog Archive

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.