Posted by : kayalislam
Thursday, 5 May 2011
அளவில் லாத அருளாளன் !
அலகில் லாத அன்புடையோன் !
உளமார் அல்லாஹ் திருப்பெயரால்
உயர்வாய் இதையாம் தொடங்குகிறோம் !
எல்லா உலகும் படைத்தாளும்
ஏகன் அல்லாஹ் தனக்கேத்தான் !
எல்லாப் புகழும் உரியதென
இதயம் குளிர போற்றுகிறோம் !
நல்லோர் பொல்லார் எல்லார்க்கும்
நாளும் பேரருள் பொழிபவனே !
நல்லோர்க் கென்றே மறுமையிலே
நல்லருள் புரியும் வல்லோனே !
அறிய நற்செயல் புரிந்தோர்க்கும்
ஆகாத் தீச்செயல் புரிந்தோர்க்கும்
உரிய தீர்ப்பை அளிக்கின்ற
உன்னத நாளின் அதிபதியே !
இறைவா உன்னை மட்டும் யாம்
இனிதாய் என்றும் வணங்குகிறோம் !
உறையும் இடர்கள் போக்கிடவே
உன்னத வியைத்தான் தேடுகிறோம் !
சீரிய சுவனப் பேறுடைய
சிராத்துல் முஸ்த்த கீமென்னும்
நேரிய பாதையை எம்மவர்க்கு
நிறைவாய் காட்டி யருள்புரிவாய் !
உந்தன் அருட்கொடை பெற்றிடுவோர்
உவக்கும் நல்வழி காட்டிடுவாய் !
உந்தன் சினத்திற்க்கு குரியோனின்
உலவும் வழியில் செலுத்தாதே !
வழிகெட் டோர்கள் செல்லுகின்ற
வழியில் எம்மை நடத்தாதே !
எளியோர் கேட்கும் இறைஞ்சலினை
ஏற்றுக்கொள்வாய் ரஹ்மானே !
ஆமீன் !