Posted by : kayalislam Friday, 6 May 2011


'சல்லூ கமா ரஅய்துமூனீ உஸல்லி' - நீங்கள் என்னை எதில் தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்.

பூமான் நபியவர்கள் இப்படித்தான் தக்பீர் கட்டினார்கள் எனவே நானும் அப்படியே கட்டுகிறேன். இப்படியே ருகூவு செய்தார்கள், ஸூஜுது செய்தார்கள் என்று தொழுகையின் ஒவ்வொரு அசைவிலும் மாநபியவர்கள் நினைவு கூறப்படுகிறார்களே! அதுவே மௌலிது தான்!

மாட்டேன்! மாட்டேன்! என்றாலும் நாளுக்கு ஐந்து முறையாவது மாநபியின் பெயரை முழங்காமல் தொழமுடியாதே!

சாம்பிராணியை அல்லது ஊதுபத்தியை புகைப்போட்டு, மக்கள் சூழ அமர்ந்து ஓதுவதற்கு மட்டும் தான் மௌலிது என்று பெயரில்லை. அன்னவர்களை நினைத்தாலே அது மௌலிது தான்... எம்மானை நினைக்காமல் இஸ்லாத்தில் எதை நிறைவேற்ற முடியும். ஆரம்ப கலிமாவே அண்ணலின் மௌலிது தானே :

لا إله إلا الله محمد رسول الله
- லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

அல்லாஹ்வையன்றி வணங்கத் தகுந்தவன் வேறுயாருமில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் .
இருந்தார்கள் என்று கூறவில்லையே இருகிறார்கள் என்றுதானே சொல்கிறோம். அதுவே மௌலிது தானே.

இரண்டாம் கலிமாவில் அல்லாஹ்வையன்றி வணங்கத் தகுந்தவன் வேறு யாருமில்லை என்று சாட்சி கூறுகிறோமே. அந்த அல்லாஹ் யார்? எங்கே இருக்கிறான் . எப்படியிருக்கிறான் என்று யார் போய்ப் பார்த்தது ? நேரிலே பார்க்காமல் எப்படி சாட்சி சொல்லுகிறோம் . அண்ணல் நபியவர்கள் சொன்னதால் தானே . அவர்கள் பார்த்துச் சொன்ன சாட்சியை நாமும் சொல்லி இஸ்லாமிய கப்பலில் பயணம் செய்கிறோம் . இல்லையேல் நிராகரிப்புக் கடலில் மூழ்கியிருப்போம் .

நாம் சுவாசிக்கும் இஸ்லாமிய காற்று இறுதிப் திருநபி தந்த பிச்சை தானே .

லாஇலாஹ இல்லல்லாஹ் என ஆயிரம் முறை சொன்னாலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என ஒரு முறை சொல்லாதவரை எப்படி முஸ்லிமாக முடியும்?

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Powered by Blogger.

Blog Archive

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.