Posted by : kayalislam Sunday, 22 May 2011

புகழப்பிறந்தவர்
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்தான நாமமான முஹம்மது என்பதை திருமறையில் நான்கு இடங்களிலும் அஹ்மது என்பதை ஒரு இடத்திலும் உரைத்திருகிறான் வல்லநாயன் .

ஏந்தல் நபியவர்களுக்கு எத்தனையோ சிறப்புத்திரு நாமங்கள் இருப்பினும் அத்தனையிலும் அதிகம் உபயோகிக்கப்படும் நாமங்கள் இவைகள்(முஹம்மது,அஹ்மது) தான் .முஹம்மது என்றால் புகழப்பட்டவர் , அஹ்மது என்றால் அதிகம் புகழ்பவர் என்பது இவ்விருனாமங்களின் இனிய பொருளாகும் .

இகழ நினைப்பவர்களின் நாவிலே கூட புகழப்பட்டவர் என்ற பொருள் கொண்ட முஹம்மது என்ற நாமத்தை நடமாடச்செய்த இறைவன் எத்தகையவன்?(சுபுஹானல்லாஹ்) . அதை அருமை நபியின் வாய்வழியாகவே கேட்போம் வாரீர் :

குறைஷிகளின் திட்டுதளையும் , அவர்களின் சபித்தலையும் என்னை விட்டு அல்லாஹ் எப்படி திருப்பி விடுகிறான் என்பது உங்களுக்கு ஆச்சரியமில்லையா? (என்னை) முதம்மம்(இகழப்படுபவர்) என்று ஏசுகிறார்கள் , சபிக்கிறார்கள் . ஆனால் நானோ முஹம்மது(புகழப்படுபவர்) ஆவேன் .(புகாரி ஷரீப் 3533)

புகழப்பட்டவர் என்ற பெயரையே பெற்ற பெருமானாருக்கு இனிமேல் தான் புகழ் உயர வேண்டும் என்பதோ, நாம் புகழ்ந்துதான் அவர்களின் புகழ் உயர வேண்டும் என்பதோ கிடையாது . இனியாராலும் புகழ முடியாத விதத்தில் அல்லாஹ்வே அவர்களைப் புகழ்ந்துக் கொண்டேயிருக்கிறான் . படைப்புக்களைப் படைக்கும் முன்னும் , படைப்புக்கள் அழிந்த பின்னும் ஆதியோ , அந்தமோ இல்லாத நித்திய ஜீவனான நாயன் தன் நேசர் மீது ஸலவாத் எனும் புகழ்மாலைகளைச் சூட்டி மகிழ்கிறான் .

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
(நபியே!) உங்கள் கீர்த்தியை நாம் உயர்த்திவிட்டோம். (அல்குர்ஆன் 94:4)

திருமறை விரிவுரையாளர்களின் தலைவர் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் இவ்வசனத்திற்கு தரும் விளக்கமாவது, அதானிலும் , இகாமத்திலும் , அத்தஹிய்யாதிலும் , குதுபாவிலும் பூமனின் பெயர் கூறப்படுவதாகும் என்றுரைக்கிரார்கள் . மேற்கூறப்பட்ட இந்த நான்குமே இறை வணக்கமான தொழுகையைச் சார்ந்ததாகும் . அல்லாஹ்வின் வணக்கமாக இருப்பினும் கூட அங்கே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நினைவு கூறப்பட வில்லையெனில் இவைகளில் எதுவுமே இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்பது சட்ட நிபுணர்கள் தரும் தீர்ப்பாகும் .

அண்ணலாரின் புகழ் பாடுவதில் தான் அவனுக்கு எத்தனை ஆசை! எனவேதான் சுவனத்தின் வாசலில் முஹம்மது என்ற திருநாமத்தை பதிந்து அதைப் பார்த்துப் பார்த்துப் பரவசம் அடைகிறான் படைத்த நாயன் ! .

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Powered by Blogger.

Blog Archive

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.