Posted by : kayalislam
Friday, 6 May 2011
காதலாய் ஓதும் ஸலவாத்து
கல்பினில் ஹாமீம் இரஸூல்
ஹாழிராகுவார்கள் தீனோரே !
கருணையாய் ஸலவாத் சொல்வீரே !
அலி அபூபக்கர் உமர் உதுமான்
அலியார் ஹஸன் ஹுஸைனும் வருவார்
அருமை ஃபாத்திமா நாயகியும்
வருவார் ஸலவாத் சொல்வீரே !
நல்லார் நபிமார் யாவரும்
நலமே வருவார் தூயரும்
நேயர் ஸஹாபாக்களும் வருவார்
நாடியே ஸலவாத் சொல்வீரே !
பஃதாதில் வாழும் நாயகா
பண்பின் நபிகளின் பேரா
பாச குணநல முஹ்யித்தீனும் வருவார்
பணிவுடன் ஸலவாத் சொல்வீரே
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்