Posted by : kayalislam
Sunday, 22 May 2011
ஜாஹிலியா(அறியாமை) காலம் அது . அரபு நாட்டிலே அறியாமை தலைவிரித்து ஆடிகொண்டிருந்த காலம் . கொடுமைகளும் சித்திரவதைகளும் நிறைந்தக்காலத்தில் அரபகத்திலே பல கெட்டபழக்கம் இருந்தது .
அதில் ஒன்று : வீட்டிலிருந்து பயணம் மேற்கொள்வதற்கு முன் மரங்களில் உள்ள பறவைகளின் மீது கல் எறிவது .
அறியாமை காலத்து நம்பிக்கை : "ஒருவர் பயணம் மேற்கொள்வது என்று முடிவு செய்துவிட்டால் அவர் முதலில் வீட்டை விட்டு வெளியேறி ஏதனும் மரத்தில் கூடு கட்டியுள்ள பறவைகளை கல்லால் அடிக்க முனைவான் . அந்தக்கல் , அப்பறவையை தாக்கினால் அவன் போகும் காரியம் வெற்றி பெற்று விடும் . அக்கல் தாக்கவிடில் போகும் காரியம் தோல்வி பெரும் " என்ற குருட்டு நம்பிக்கை அன்றைய அறியாமை காலத்து அரபிகளிடம் இருந்து வந்தது .
பறவைகளின் நிலையோ மிகவும் பரிதாபம் , அதற்காக யாரும் வாதிடமாட்டார்கள் . யாரும் மக்களிடம் "நீங்கள் செய்வது தவறு" என்று கூற மாட்டார்கள்(ஏனெனில், அவர்களே அக்காரியத்தில் ஈடுபட்டு இருப்பர்) , அதன் மீது தனி அக்கறை காட்டுவதர்க்கும் யாரும் கிடையாது . பல பறவைகள் இந்த இரக்கமற்ற செயல்கள் மூலம் செத்து மடிந்தன .
அப்படிப்பட்ட பரிதாப நிலை இருந்தது , அந்தப் பறவைகளுக்கு! . அப்பொழுதுதான் , ரப்புல் ஆலமீன் அல்லாஹ் அப்பறவைகளுக்கும் ரஹ்மத்தாக ஈருலக வேந்தர் ரஹ்மத்துளில் ஆலமீன் நமது உயிரிலும் மேலான கண்மணி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான் .
அந்த பாச நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் " நீங்கள் செய்யும் இந்தக் காரியம் மிகவும் தீயதாகும் " என்று முதல் முதலில் அறிவுரை வழங்கினார்கள் . அதுவும் மிகவும் அழகான விதத்தில் .
அந்த அழகான விதம் இதோ : " உங்களின் தூக்கம் எவ்வளவு புனிதமானதோ அதைப்போன்று தான் அப்பறவைகளின் தூக்கமும் புனிதமானது . அதனை அதன் கூட்டில் நிம்மதியாக தூங்க விடுங்கள் . அதை கல்லால் அடித்து எழுப்பாதீர்கள் " . சுபுஹானல்லாஹ் ! அந்த பறவைகள் மீதும்தான் எவ்வளவு பாசம் அந்த பாசநபிக்கு! . வெறும் வார்த்தைகளால் "பறவைகளை கல்லால் அடிக்காதீர்கள்" என்றும் கூறி இருக்கலாம் . ஆனால் ஈருலக வேந்தர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அந்த பறவையின் அந்தஸ்தை உயர்த்தி அதன் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து "பறவைகளை அதன் கூட்டில் நிம்மதியாக தூங்க விடுங்கள்" என்று அழகிய முறையில் எடுத்து உரைத்தார்கள் , சுபுஹானல்லாஹ் !
இப்படிபட்ட புனித நபிக்கு பறவைகள் நன்றி செய்யும் பொருட்டு தனது இறக்கைகளை அடித்த வண்ணம் அன்றிலிருந்து இன்றுவரை(கியாமம் வரையிலும்) புகழ் பாடிக்கொண்டே இருக்கிறது .