Posted by : kayalislam Friday, 5 August 2011




மாநபிகள் மீது அன்பாய் சேர்ந்து ஸலவாத் ஓதிடுவோம்
யாரஸூலே யாஹபீபே என்று இனிதாய் அழைத்திடுவோம்
மாநபிகள் மீது அன்பாய் சேர்ந்து ஸலவாத் ஓதிடுவோம்
யாரஸூலே யாஹபீபே என்று இனிதாய் அழைத்திடுவோம்
நாரயே ரிஸாலத் யாரஸூலல்லாஹ் !
நாரயே ரிஸாலத் யாரஸூலல்லாஹ் !
நாரயே ரிஸாலத் யாரஸூலல்லாஹ் !
ஸல்லி 'அலா நபி'யினா ஸல்லி அலா முஹம்மது
ஸல்லி 'அலா நபி'யினா ஸல்லி அலா முஹம்மது
                                                                                                                                ( மாநபிகள் )

துன்பம் துயரம் தொல்லைகள் யாவும்
பணிபோல் மறைந்தே போகுமே !
துன்பம் துயரம் தொல்லைகள் யாவும்
பணிபோல் மறைந்தே போகுமே !
துய்யோன் இறைவன் அருள்மழை என்றும்
நம்மில் பொழிந்திட செய்யுமே
                                                                                                                                ( மாநபிகள் )

கருணை நபியை கணவிலும் நினைவிலும்
கண்டு களித்திடச் செய்யுமே !
கருணை நபியை கணவிலும் நினைவிலும்
கண்டு களித்திடச் செய்யுமே !
கண்மணி வாழும் மதினா நகருக்கு
நம்மைக் கொண்டு சேர்க்குமே
                                                                                                                                ( மாநபிகள் )

உள்ளம் உருகி ஓதிடும் போது
கல்பில் நிம்மதி பொங்குமே !
உள்ளம் உருகி ஓதிடும் போது
கல்பில் நிம்மதி பொங்குமே !
உத்தம நபியின் ஆசியினால்
நம் நாட்டங்களும் நிறைவேறுமே
                                                                                                                                ( மாநபிகள் )

வேந்தர் நபியை மஹ்ஷரில் காண
விரைந்தே உதவிடும் மந்திரமே !
வேந்தர் நபியை மஹ்ஷரில் காண
விரைந்தே உதவிடும் மந்திரமே !
சுந்தர நபியின் தோழர்களோடு
சுவனம் ஏகிடச் செய்யுமே
                                                                                                                                ( மாநபிகள் )

காலை மாலை இரவென்றில்லை
எப்போதும் நாம் ஓதுவோம் !
காலை மாலை இரவென்றில்லை
எப்போதும் நாம் ஓதுவோம் !
இத்தனை என்றொரு எல்லையுமின்றி
இத்தரை மீதே ஓதுவோம்
                                                                                                                                ( மாநபிகள் )

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Powered by Blogger.

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.