Posted by : kayalislam Thursday, 25 August 2011




இறைவா நீ அருள் புரிவாய்
நிறைவாய் எமக்கீந்தருள்வாய்
கரமேந்தும் உன்னடியான்
குறை தீர்த்தே அருள் புரிவாய்
                                                                                                                                            ( இறைவா நீ )

நாயனே உன்னேவல் பேணி நான் நடந்திப்பூவிலே (x2)
நீயுகந்த நல்லடியார் குழுவிலே ஒன்றாகியே (x2)
நாளைஅந்தநாளிலே பரிவோடு எனைநீ நோக்கவே (x2)
நாயனே நாயனே நான் மன்றாடுகின்றேன் தூயனே !
                                                                                                                                            ( இறைவா நீ )

பாவமென்னும சேற்றிலே நான் வீழ்ந்து மூழ்கிடாமலே (x2)
பண்புயர்ந்த முன்னவர் எழிலான பாதை ஏகியே (x2)
பாசநபிகள் நாதரின் கரம் கோர்த்து சுவனம் சேரவே (x2)
நாயனே நாயனே நான் மன்றாடுகின்றேன் தூயனே !
                                                                                                                                            ( இறைவா நீ )

சோதனைகள் ஆயிரம் எனை சூழ்ந்து வதைத்த போதிலும் (x2)
சாந்தி நல்கும் உன்கருணை பார்வை ஒன்றே போதுமே (x2)
சிந்தையில் என்நெஞ்சினில் உன் நினைவே மலரச் செய்குவாய் (x2)
நாயனே நாயனே நான் மன்றாடுகின்றேன் தூயனே !
                                                                                                                                            ( இறைவா நீ )

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Powered by Blogger.

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.