Posted by : kayalislam
Monday, 15 August 2011
ஒளியாம் நபிகள் வந்தார்கள்
ஒளியைக் கொண்டு தந்தார்கள்
எல்லா உலகும் ஒளியாய்க்கானும்
வழியைக் காட்டித் தந்தார்கள்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாஹபீபல்லாஹ்
வானின் பானும் மின்னும் மீனும்
மன்னிய ரொளியாய் லிலங்கினவே
அண்ணல் நபியின் உதயம் நினைந்து
புண்ணியம் சேர்க்க வாரீரோ
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
மஹ்பூபுவின் மஹ்பூபாம் நபி
அஹ்மதர் புகழை யோதிடுவோம்
தீதுகள் களைந்து மாதவம் சேர்த்து
நாதர் நல்வழி சார்ந்திருப்போம்
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
அருளோடு அன்பாய் நிலைத்திடும் ஏகன்
அருளாய் அவனியில் பிறந்தோரை
"யாரஸூலல்லாஹ்" என்றோங்கி
இரைந்தே காதலில் கரைந்திடுவோம்
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
இல்லந்தோறும் வீதி(கள்) தோறும்
அவர் புகழ் பாடி மகிழ்ந்திருப்போம்
நல்ல வராகும் வழியினைக் காட்டும்
அண்ணலார் அன்பினில் நிலைத்திருப்போம்
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
இம்மையேயன்றி மறுமை யந்நாளிலும்
மன்னவர் புகலே உயர்ந்திருக்கும்
மர்ஹபன் யா முஸ்தபா - என்றேற்றி
பரவசம் பூண்டிருப்போம்
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
புண்ணியம் சுமந்த அன்னயராமினர்
கண்ணிய பாலகர் பிறந்ததினால்
மண்ணிலும் விண்ணிலும் முஃமினானோர்
கண்கள் குளிர்ச்சி கண்டனரே
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
ஈது மீலாதுன்னபியை
இகமதில் மகிழ்வுடன் கண்டவர்கள்
தீது உள்ளோராயினும் கூட
பாதகம் துறந்து சிறப்பாரே
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
காலைக் கதிரும் கூட மதீனா
ஒளியை பெற்று விரிந்திடுமே
மாலை மதியும் மீனும் அதுபோல்
மன்னவர் ஒளியை இரந்திடுமே
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
நாதியற்றவர் துயரம் தோய்ந்தவர்
பீதி யகற்றும் அரு மருந்தே
நாதர் தோன்றிய ஈது மீலாதேனும்
காதல் தினம் தான் உணர்வீரே
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
சாந்தொளி அண்ணலர் வழிதனில் வந்த
சந்ததியனைவரும் ஒளியினரே
தூய வரன்னவர் நிறையொளியெல்லாம்
நூரு முஹம்மதர் கண் ணொளியே
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
நபி புகழ் பாடும் காதலர் நமக்கு
மரணம் கூட பயமில்லை
கபுரிலும் கூட முஸ்தஃபா நபி
புகழைப் பாடிக் கொண்டிருப்போம்
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
நபி புகழ் பாடும் அடிமைகள் நமக்கு
மரணம் கூட பயமில்லை
கபுரிலும் கூட முஸ்தஃபா நபி
புகழைப் பாடிக் கொண்டிருப்போம்
( ஒளியாம் நபிகள் வந்தார்கள் )
ஒளியாம் நபிகள் வந்தார்கள்
ஒளியைக் கொண்டு தந்தார்கள்
எல்லா உலகும் ஒளியாய்க்கானும்
வழியைக் காட்டித் தந்தார்கள்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாஹபீபல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாஹபீபல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாஹபீபல்லாஹ்