Posted by : kayalislam
Tuesday, 16 August 2011
உங்கள் மதிமுகம் காண்பது எந்த நாள்
உள்ளம் மகிழ்வினில் ஆர்வது எந்த நாள்
உங்கள் மதிமுகம் காண்பது எந்த நாள்
உள்ளம் மகிழ்வினில் ஆர்வது எந்த நாள்
யாரஸுல் முஸ்தஃபா யா ஹபீப் முஸ்தஃபா
யாரஸுல் முஸ்தஃபா ஏந்தல் யா முஸ்தஃபா
யாரஸுல் முஸ்தஃபா யா ஹபீப் முஸ்தஃபா
யாரஸுல் முஸ்தஃபா ஏந்தல் யா முஸ்தஃபா
உலகாள்வோன் உடையவன் ஒளியாலமைந்த தூயர்
உலகாள்வோன் உடையவன் ஒளியாலமைந்த தூயர்
நலமோங்கும் நெறியினை நிலை நாட்ட வந்த தூதர்
உயர்வானின் அமரர் வாழ்த்தும் பயகம்பர் மா முஹம்மத்
உயர்வானின் அமரர் வாழ்த்தும் பயகம்பர் மா முஹம்மத்
( உங்கள் மதிமுகம் )
மதிவாணர் அறவினோர் மனயேட்டில் மிளிரும் மாணல்
மதிவாணர் அறவினோர் மனயேட்டில் மிளிரும் மாணல்
விதி கூறும் வான்மறை குர்ஆனை ஈந்த வள்ளல்
மணிமுத்து வாக்கினாலே மடமைகள் மாய்த்த செம்மல்
மணிமுத்து வாக்கினாலே மடமைகள் மாய்த்த செம்மல்
( உங்கள் மதிமுகம் )
தனங்கோடி பதவிகள் தமைநாடி வந்த போதும்
தனங்கோடி பதவிகள் தமைநாடி வந்த போதும்
தளராமல் கொள்கையில் திடமாக நின்ற தீரர்
அணலான ஏசல் கேட்டும் அதி பொறுமை பூண்ட அண்ணல்
அணலான ஏசல் கேட்டும் அதி பொறுமை பூண்ட அண்ணல்
( உங்கள் மதிமுகம் )
அடுபோரின் களத்திலே குஃபிரோரை வென்ற வீரர்
அடுபோரின் களத்திலே குஃபிரோரை வென்ற வீரர்
அரசோட்சும் முறையிலே அறமார்ந்த நீதியாளர்
கடைநாளில் முஃமினோரை கறையேற்றும் கருணை நாதர்
கடைநாளில் முஃமினோரை கறையேற்றும் கருணை நாதர்
( உங்கள் மதிமுகம் )
மஹ்மூது அஹ்மது தாஹா நல் யாஸீன் என்று
மஹ்மூது அஹ்மது தாஹா நல் யாஸீன் என்று
மகிவாழும் தீன்குலம் மகிழ்வாகப் போற்றும் காஸிம்
மணக்கும் கஸ்தூரி தேகர் மறைபோற்றும் சுவன ராஜர்
மணக்கும் கஸ்தூரி தேகர் மறைபோற்றும் சுவன ராஜர்
( உங்கள் மதிமுகம் )