Posted by : kayalislam Monday, 29 August 2011


இறைவா! எங்கள் பெருமானார்
ஏந்தல் முஹம்மது நபிமீது
குறையா தோங்கும் ஸலவாத்தைக்
குன்றா தென்றும் சொரிந்தருள்வாய்!

மாண்புகழ் கொண்ட மெய்ஞ்ஞான
மணிமுடி சூட்டப் பெற்றோராம்
வான்புகழ் மிஃராஜ் புராக்குடனே
வானோர் கொடியும் பூண்டோராம்.

துன்பம், பிணிகள், கொள்ளை நோய்,
துயரம், பஞ்சம், பெருங்கவலை
என்பவை போக்கி எல்லோர்க்கும்
ஏற்றம் சேர்க்கு மருந்தவராம்.

அண்ணல் நபியின் திருப்பெயரோ
அருமறை களிலே உறைந்துள்ளதாம்
எண்ணும் லௌஹிலும் கலத்தினிலும்
ஏற்றி எழுதப் பட்டுள்ளதாம்.

அரபிக் அஜமிகள் யாவர்க்கும்
அவரே தலைவர், அவருடலம்
மரபுடன் தூய்தாம் கஃபாவில்
மாண்பார் சூழலில் ஒளிவீசும்.

காலையில் தோன்றும் பரிதியவர்
கங்குல் மிளிரும் முழுமதியாம்
ஞால மீதில் உயர்தலைவர்
நேர்வழி காட்டும் ஒளியாவார்.

படைப்புக் கெல்லாம் அடைக்கலமாம்
பகரும் இருளில் விளக்கொளியாம்
நடைமுறை இயல்புகள் அனைத்திலுமே
நலமார் எழிலைக் கொண்டோராம்.

நேர்வழி யாளர்க் கிறையின்பால்
நேரும் ஷபாஅத் செய்பவராம்
சீர்பொருள் அள்ளிக் கொடுப்பதிலே
சிறந்த வண்மை பூண்டோராம்.

மன்னான் அவரின் காவலனாம்
வானவர் ஜிப்ரீல் ஊழியராம்
மின்னேர் புராக்கே வாகனமாம்
மிஃராஜ் புனிதப் பயணமுமாம்.

முன்தஹா மரத்தின் தானத்தே
மொழியும் காப கவ்சைனில்
அந்தே னிறையைக் காண்பதுவே
அவரின் நாட்டம் குறிக்கோளாம்.

இறைதூ தர்க்கவர் அதிபதியாம்
இயல்நபி மார்க்கவர் முத்திரையாம்
கறையார் பாவம் புரிந்தோர்க்காய்
காவலன் பால் மிக வேண்டிடுவார்.

எளியோர்க் குதவும் எந்தலவர்
எவ்வுலக குக்கும் அருட்கொடையாம்
அளியோ டன்பு பூண்டோரின்
அகத்தில் அமைதி பொழிவோராம்.

காணும் ஆவல் பூண்டோர்க்குக்
கனியும் நாட்டம் ஆனவராம்
பேணும் ஆத்ம ஞானியர்க்குப்
பெருஞ்சுட ரான பகலவனாம்.

வழிச்செல் வோர்க்கவர் சுடராவார்
வல்லோன் இறையின் அருகிருக்க
விழைவோர் தமக்கு விளக்காவார்
வறியோர் எளியோர்க் கருள்நேயர்.

பேரிறை பக்தர்க் கவர்தலைவர்
புனிதத் தலங்களின் நபியுமவாட
ஏரிரு கிப்லா இரண்டினிமாம்
ஈருல கில்நம் காப்பாளர்.

சீரிய காப கவ்ஸைனின்
சிறப்புக் குரிய தோழரவர்
பாரின் இருகீழ் மேற்குகளைப்
படைத்துக் காப்போன் நேயரவர்.

மன்னும் ஹஸனுசைன் திருப்பாட்டார்
மனுஜின் இறையின் ஒளியாவார்
முகமதில் இலங்கும் பேரொளியை
முனைந்து காண விழைவோரே!

அண்ணல் மீதும் அவர்கிளைஞர்
அருமைத் தோழர் மீதெல்லாம்
வண்ணம் செறியும் ஸலாத்துஸலாம்
வாயே கமழ மொழிந்திடுவோம்









Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Powered by Blogger.

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.