Posted by : kayalislam
Friday, 12 August 2011
யாரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே
இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால்
ரஹ்மத்தைச் சொரிவாயே
முந்திய பத்தினில் ரஹ்மத்தும் மத்திய
பத்தினில் குஃப்ரானும்
இன்னும் பிந்திய பத்தினில் இத்கையும் பொதிந்த
ரமழானைத் தந்தாயே
( யாரஹ்மானே )
அஸ்ஸவ்முலீ வஅனல்லதி அஜ்ஸீ
பிஹி என்று மொழிந்தாயே
இந்த நோன்பெனக்காகும் நான்
கூலி அளிப்பேன் என்று நீ பகர்ந்தாயே
( யாரஹ்மானே )
லைலத்துல் கத்ரி ஃகைரும்மின் அல்ஃபி
ஷஹ்ரென்று உரைத்தாயே
ஒரு ஆயிரம் மாதம் வணக்கத்தை விட
இவ்விரவை நீ மதித்தாயே
( யாரஹ்மானே )
நோன்பு பிடித்தோம் தராவீஹ் தொழுதோம்
பல அமல்கள் செய்தோம்
எங்கள் வணக்கங்கள் தனையும் வேண்டுதல்களையும்
கபூல் செய்து அருள்வாயே
( யாரஹ்மானே )
தைக்காவில் தொழுதோம் திக்ருகள் செய்தோம்
ஸலவாத்துகள் உரைத்தோம்
எங்கள் தையானே எம்மை ரமழானின் பொருட்டால்
சுவனத்தில் சேர்ப்பாயே
( யாரஹ்மானே )
பிழை பொருப்போனுனையன்றி வேறாரும்
இல்லையே இல்லையே
பெரும் புகழுடையோனே இகபரவாழ்வில்
ஆதரித்தருள்வாயே
( யாரஹ்மானே )
ஷெய்கு சுலைமான் ஸூதன் நூஹு தம்பியின்
இந்த முனாஜாத்தை
நல்ல ஷவ்குடன் படித்தோம் இஷ்குடன் கேட்டோம்
கையேற்றுக் கொள்வாயே
( யாரஹ்மானே )
யாறப்பி ஸல்லி ஸல்லிம் அலா தாஹா
கைரிகல்கில்லாஹ்
தும்ம ஆலின் வஸஹ்பின் ஹிஸ்பின் லிறபின் தாபிஇ
ஸூப்லில்லாஹ்
( யாரஹ்மானே )