Posted by : kayalislam
Tuesday, 30 August 2011
வந்தாயே ரமழான் உன்னை வழிபார்த் திருந்தோம் எங்கள்
சிந்தை தெளிக்கும் உயர் சிறப்பான ரமழானே
( வந்தாயே )
வந்தா லருல்பபுரிவாய் வாழ்வில் வளந் தருவாய்
வாட்டும் வினைகளெல்லாம் ஓட்டிவிடும் ரமழானே
( வந்தாயே )
பாபக்க டல்கடக்கும் பாய்க் கப்பல் போல் வாழ்வில்
சாபங்கள் போக்கும் இறை சுபமான ரமழானே
( வந்தாயே )
பயிருக்கு மழை உணவாய் பாரில் வழிந்தோடும்
பாவிக்கு உன் வரவால் பலனீயும் ரமழானே
( வந்தாயே )
வெள்ளம் கடந்தகன்றார் உன்பொருட்டால் நபிநூஹு
கள்ளப்பொ றாமைநீக்கும் காருண்யா ரமழானே
( வந்தாயே )
இப்ராஹீமை நெருப்பும் எரிக்கவில்லை யுன்பொருட்டால்
தப்பில்லா தெங்களைநீ தாங்கிடுவாய் ரமழானே
( வந்தாயே )
அறியாமல் நாங்கள் செய்யும் அநியாயம் தீங்கைவிட்டும்
பிரிந்திடவே அருள்புரிவாய் பெருமைமிகு ரமழானே
( வந்தாயே )
உன் லைலதுல் கத்ரில் உருவாக்கி வான் மறையை
இந்நிலமேல் ஏகன்தந்த புண்ணியமார் ரமழானே
( வந்தாயே )
எத்தனையோ வினைகள் எம்மின் இதயங்களை வாட்டும்போதும்
அத்தனையும் நீ தொலைத்தே அருள்புரிந்த ரமழானே
( வந்தாயே )
நீலநதி யைப்பிளந்தார் நபிமூஸா உன் பொருட்டால்
சீல்பாவம் விட்டெங்களைச் சிறப்பாக்கிய ரமழானே
( வந்தாயே )
யாறப்பு எங்கள் பிழை பொறு ரமழான் பொருட்டாலே
கோருமெங்கள் நாட்டமெல்லாம் கூடிடவே அருள்வாய்
( வந்தாயே )
யாறப்பு இரவில் நின்றே யாம் தொழுத தொழுகையெல்லாம்
ஏற்றுனது சமூகத்திலே இனிய பலன் அருள்ந்தாயே
( வந்தாயே )