Posted by : kayalislam
Wednesday, 8 August 2012
அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே
அந்த ஆவலினால் காவலின்றி இதயம் வாடுதே
நீரிருக்கும் தாமரை போல் நெஞ்சம் மலருதே
அண்ணல் நேசத்துக்கும் பாசத்துக்கும் கண்கள் ஏங்குதே
யார் இதனை அங்கு வந்து எடுத்துச் சொல்வது
உங்கள் அழைப்பிற்காக எனது மனம் ஏங்கி துடிக்குது
இறுதி தூதின் நுபுவத்தொளிரும் தங்கள் முதுகிலே
முத்தமிடுவதற்கும் தொடுவதற்கும் இதழ்கள் துடிக்குதே
தாயிஃப் நகர் கல்லடிகள் தந்த தழும்பிலே
இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே
கஸ்தூரி மனம் கமழும் தங்கள் மேனியை
இந்த கண்களாலே பருகுகின்ற ஆவல் தழும்புதே
புஷ்பங்களின் மகரந்தமாய் மதீனப் புழுதியில்
நான் புரள வேண்டும் உருள வேண்டும் போலிருக்குதே
Mashaa Allah Jazakallah
ReplyDelete