Posted by : kayalislam
Friday, 10 August 2012
தாஹா ரஸூலே தனியோனின் தூதே
எப்போது நான் காண்பது
வாகான உங்கள் மலர் பாதம் காண
என்னுள்ளம் இங்கே ஏங்குதே
( தாஹா ரஸூலே )
தங்கத்திரு மக்கப் பதி மீதில் ஒரு வானின் நிறை
திங்கள் என வந்துற்ற நல் மா முஸ்தபா
கத்தன் இறைவன் சுத்தச் சுடரே
கந்தம் கமழும் பொங்கும் எழிலே
சித்தன் தனில் முத்தம் என நித்தன் திகள்
கோமானே இங்கே நான் பாடும் பாட்டில்
பூவாச மேற்றும் பெருமாண்பு சான்ற
யாஸீனே ஏந்தல் தாஸீன் நீரே
( தாஹா ரஸூலே )
துங்கம் மிகு முந்தன் மறை எங்கும் பிரசங்கம் பெற
தேனின் உரையே நல்கிய மா முஸ்தபா
திட்டித் திரிந்த தீயர் பகையோர்
கட்டித் தழுவும் பண்பை யளித்தீர்
துட்டக் குஃபிர் மொத்தப் படை மட்டித்திட
போராடி அன்று பொல்லாங்கு வென்று
படி மீது தூய பொன் மார்க்கந் தந்த
யாஸீனே ஏந்தல் தாஸீன் நீரே
( தாஹா ரஸூலே )
வானின் கரு மேகக் குளம் வடிவாகவே குடை ஏந்திடும்
வள்ளல் திரு எம்மான் நபி யா முர்தழா
உள்ளத்திரையில் உங்கள் மொழிகள்
மெல்லப் படர செல்லும் கறைகள்
பள்ளந்தனில் பாய்ந்தோடிடும் வெள்ளம் என
பெருமானே உங்கள் மீதான தாகம்
புவி மீது என்று எவ்வாறு தீரும்
யாஸீனே ஏந்தல் தாஸீன் நீரே
( தாஹா ரஸூலே )