Posted by : kayalislam
Saturday, 25 August 2012
மாநபியே உங்கள் மகிமையை சொல்ல
எவரிங்கு உண்டு இறைவனைத் தவிர
ஒளிமய உருவே உண்மையின் வடிவே
உங்கள் திருமுகம் என்று நான் காண்பேன்
எங்கிருந்தாலும் எங்கு சென்றாலும் உங்கள் நினைவு மட்டுமே போதும்
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!
கண்ணான கண்மணியே கஸ்தூரி மாமலரே
கருணை மழையே கார் முகிலே
கரைகள் தெரியா பேரறிவே
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!
கலிமா பொருளின் சூழ்ச்சுமமே
கல்பில் உரையும் காவியமே
நபிமார்க்கெல்லாம் நாயகமே
நானிலம் தோன்ற காரணமே
மக்கா பிறந்த மாணிக்கமே
மதீனா வாழும் மாபெருந்தவமே
எண்பது கோடி தீனோர் தினமும்
ஏக்கம் கொண்டு தேடும் ரஸூலே
ஓவ்வொரு பாங்கும் உம் பெயர் ஒலிக்க
உலகின் திசைகள் மணக்கும் ஹபீபே
எல்லா உயிரும் சுவனம் சேர
என்றும் உழைத்த ஏகன் தூதே
தாயினும் அன்பு பூண்டவரே
தாஹா நபியே நாயகமே
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!
மறுமை நாளில் யார் வருவார்
மக்கள் கண்ணீர் யார் துடைப்பார்
நரகம் போகும் பாவிகளை
நாயனை கெஞ்சி யார் தடுப்பார்
இறைவன் சமூகம் மன்றாட நபி
இரஸூல் தவிர யார் அங்கு உண்டு
மண்மேல் வாழ அவர் வழிவேண்டும்
மரணிக்கும் போது அவர் பெயர் வேண்டும்
கப்ரில் கூட அவர் ஒளி வேண்டும்
கடைசி வரைக்கும் அவர் துணை வேண்டும்
எல்லா உயிரும் அஞ்சிடும் நாளில்
இதயம் நடுங்கா ஓருயிர் நீரே
அர்ஷில் நடந்த நாயகமே
சுவனம் தேடும் சோபிதமே
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!
முல்லை விதைத்தார் பாதையிலே
கல்லால் அடித்தார் மேனியிலே
நபிகள் குடும்பம் வாடிடவே
பிரித்தே வைத்தார் ஊர் வெளியே
கொடியோர் கொடுமை செய்தாலும் நபி
கோபம் கொண்டே சபித்ததுமில்லை
அமரர்கள் இறங்கி அனுமதி கேட்டும்
அழித்து விடாமல் காத்த ரஸூலே
இறைவனின் கோபம் இறங்கி விடாமல்
அவனிடம் வேண்டி அழுத ரஸூலே !
அன்பே வடிவாய் ஆன ரஹீமே
அருளே மணமாய் அமைந்த ரவூஃபே
அரசருக்கரசே! யாநபியே!
தரிசனம் தருவீர் மாநபியே!
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!