Posted by : kayalislam Wednesday, 1 August 2012




கதீஜா நாயகியின் மீதன்பு கொண்டவர் புகழை ஓதிடுவோம்
கருணை பெறுவோமே புவிமீதில்
கருணை பெறுவோமே புவிமீதிலே வாரீரே பாரோரே
                                                                                                                                                  ( கதீஜா நாயகியின் )

கண்ணிய நபியை கடிமணம் செய்திட எண்ணிய நாயகியாம்
எத்தவம் புரிந்தோ இத்தலம் மீதில் முத்தொளியை மணந்தார்
அன்பாசை மீறிடவே நபியை மண் மீதில்
அன்பாசை மீறிடவே நபியை மண் மீதில் நாயகராய் அடைந்தார்
                                                                                                                                                  ( கதீஜா நாயகியின் )

முதல் பல கொண்டே வணிகம் செய்தார் பெருலாபம் கண்டார்
முதலாய் நபிக்கே மணையாய் அமைந்தே அதிலும் லாபம் கண்டார்
இன்பம் மிகக் கொண்டே நம் நபியின்
இன்பம் மிகக் கொண்டே நம் நபியின் அன்பில் நனைந்தாரே
                                                                                                                                                  ( கதீஜா நாயகியின் )

அண்ணல் பெருமான் அரியணை அகந்தனில் அமர்ந்தகம் மகிழ்ந்தாரே
அகமுக மலர்ந்திட அண்ணலை கண்ணென கண்டு மகிழ்ந்தனரே
பண்ணாலே பாடிடுவோமே பாசநபியின்
பண்ணாலே பாடிடுவோமே பாசநபியின் பாவையராம் அவரை
                                                                                                                                                  ( கதீஜா நாயகியின் )

செழுந்தீன் செழித்திட செம்மலர் மகிழ்ந்திட செல்வம் ஈந்தனரே
பொன்னும் பொருளும் இன்னும் பலவும் ஈந்தகம் குளிர்ந்தனரே
அண்ணலின் எண்ணம் மின்னிட தன்னைத்
அண்ணலின் எண்ணம் மின்னிட தன்னைத் தந்து மகிழ்ந்தனரே
                                                                                                                                                  ( கதீஜா நாயகியின் )

ஹீரா சென்றே சீராய் நபிக்கு பணிவிடை செய்தனரே
ஓதுக வென்றொரு சொல் நபிக் கேட்டு போர்த்துக என்றனரே
போர்த்தி பொங்குக மங்களம் நன்னபி
போர்த்தி பொங்குக மங்களம் நன்னபி என்றன்னை மொழிந்தனரே
                                                                                                                                                  ( கதீஜா நாயகியின் )

பைங்கிளி பாத்திமா ஜைனும் முகுல்தூம் ருக்கையா அன்னையரே
மறை மொழிக் கூறிடும் அகில மீதில் மகி முஃமின் அன்னையரே
முன்னோனிறை முகமன் ஏற்றீரே
முன்னோனிறை முகமன் ஏற்றீரே முத்து கதீஜா நாயகியே
                                                                                                                                                  ( கதீஜா நாயகியின் )

துக்கமகற்றி துரத்திடும் நபிகள் துயரமடைந்தனரே
என்னைப் பிரிந்தார் அன்னை கதீஜா என நபி அழுதனரே
அல்லாஹ் ஆறுதல் கூறி நபியை
அல்லாஹ் ஆறுதல் கூறி நபியை அருகே அழைத்தானே
                                                                                                                                                  ( கதீஜா நாயகியின் )

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Powered by Blogger.

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.