Posted by : kayalislam
Friday, 31 August 2012
ஏகன் இறை தூதரே திங்கள் நபி மணியே
எங்கள் யா ரஸூலல்லாஹ்
ஜோதி அருள் வடிவே ஆதி ஒளிவிளக்கே
எங்கள் யா ஹபீபல்லாஹ்
( ஏகன் இறை தூதரே )
ஆயிரம் பொன் நிலவே ஓராயிரம் கண் போதாது காணும் போதிலே
சொர்க்க தென்றல் காற்றே கண்மணி நபி மீது நீ வீசும் போதிலே
கஸ்தூரி வாசமே கமழ்ந்து வீசுமே
( ஏகன் இறை தூதரே )
ரோஜா மலர் சோலை தவ்ஹீதின் ரோஜா பூவே என் தாஹா நபியே
அண்ணல் நபி நாதர் ஜன்னத்தில் வாழும் வேந்தர் பயகம்பர் நபியே
உம்மத்தின் செல்வமே சந்தோஷம் கிட்டுமே
( ஏகன் இறை தூதரே )
சத்தியத்தின் தூதே சற்குணம் கொண்ட நூறே என்னுள்ளம் மீதிலே
ஹக்கன் அருள் பெறவே அல்லாஹ்வின் திரு வேதாய் என் நெஞ்சம் மீதிலே
சிம்மாசனம் தர பேரொளி சிந்துமே
( ஏகன் இறை தூதரே )