ஏகன் இறை தூதரே திங்கள் நபி மணியே
ஏகன் இறை தூதரே திங்கள் நபி மணியே
எங்கள் யா ரஸூலல்லாஹ்
ஜோதி அருள் வடிவே ஆதி ஒளிவிளக்கே
எங்கள் யா ஹபீபல்லாஹ்
( ஏகன் இறை தூதரே )
ஆயிரம் பொன் நிலவே ஓராயிரம் கண் போதாது காணும் போதிலே
சொர்க்க தென்றல் காற்றே கண்மணி நபி மீது நீ வீசும் போதிலே
கஸ்தூரி வாசமே கமழ்ந்து வீசுமே
( ஏகன் இறை தூதரே )
ரோஜா மலர் சோலை தவ்ஹீதின் ரோஜா பூவே என் தாஹா நபியே
அண்ணல் நபி நாதர் ஜன்னத்தில் வாழும் வேந்தர் பயகம்பர் நபியே
உம்மத்தின் செல்வமே சந்தோஷம் கிட்டுமே
( ஏகன் இறை தூதரே )
சத்தியத்தின் தூதே சற்குணம் கொண்ட நூறே என்னுள்ளம் மீதிலே
ஹக்கன் அருள் பெறவே அல்லாஹ்வின் திரு வேதாய் என் நெஞ்சம் மீதிலே
சிம்மாசனம் தர பேரொளி சிந்துமே
( ஏகன் இறை தூதரே )
நல் ஸலவாத்தை சொல்வோம் நாம் உங்கள் வாசலிலே
நல் ஸலவாத்தை சொல்வோம் நாம் - உங்கள் வாசலிலே
நல்லிறையோனின் தூதே - நம் உயர் மூச்சும் நீரே
நின்னருள் தேட வருவோமே - உங்கள் வாசலிலே
ஹபீபே! ரஸூலே! இப்புவி வாழும் நூரே
உம் முகம் காண வருவோம் நாம் - உங்கள் வாசலிலே
நம் உடலின் உயிர் நீரே - நம் கண்ணின் ஒளி நீரே
நம் பண்ணின் இசை நீரே - நம் குறலின் ஒலி நீரே
நீரின்றி நாமிங்கு இல்லை - நீர் தானே உலகத்தின் எல்லை
நம் உயிர் யாவும் தருவோம் நாம் - உங்கள் பாதத்திலே
ஹபீபே! ரஸூலே! இப்புவி வாழும் நூரே
உம் முகம் காண வருவோம் நாம் - உங்கள் வாசலிலே
கலிமாவின் திகழ்வோரே - கலிமாவின் பொருள் நீரே
கலிமாவின் உயிர் நீரே - ஈருலகின் ஒளி நீரே
மெஞ்ஞான தீன் பாதை தந்தீர்
விஞ்ஞானம் வியந்திடவே சொன்னீர்
உடல் பொருள் யாவும் தருவோம் நாம் - உங்கள் தியாகத்திலே
நல்லிறையோனின் தூதே - நம் உயர் மூச்சும் நீரே
நின்னருள் தேட வருவோம் நாம் - உங்கள் வாசலிலே
மாநபியே உங்கள் மகிமையை சொல்ல எவரிங்கு உண்டு இறைவனைத் தவிர
மாநபியே உங்கள் மகிமையை சொல்ல
எவரிங்கு உண்டு இறைவனைத் தவிர
ஒளிமய உருவே உண்மையின் வடிவே
உங்கள் திருமுகம் என்று நான் காண்பேன்
எங்கிருந்தாலும் எங்கு சென்றாலும் உங்கள் நினைவு மட்டுமே போதும்
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!
கண்ணான கண்மணியே கஸ்தூரி மாமலரே
கருணை மழையே கார் முகிலே
கரைகள் தெரியா பேரறிவே
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!
கலிமா பொருளின் சூழ்ச்சுமமே
கல்பில் உரையும் காவியமே
நபிமார்க்கெல்லாம் நாயகமே
நானிலம் தோன்ற காரணமே
மக்கா பிறந்த மாணிக்கமே
மதீனா வாழும் மாபெருந்தவமே
எண்பது கோடி தீனோர் தினமும்
ஏக்கம் கொண்டு தேடும் ரஸூலே
ஓவ்வொரு பாங்கும் உம் பெயர் ஒலிக்க
உலகின் திசைகள் மணக்கும் ஹபீபே
எல்லா உயிரும் சுவனம் சேர
என்றும் உழைத்த ஏகன் தூதே
தாயினும் அன்பு பூண்டவரே
தாஹா நபியே நாயகமே
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!
மறுமை நாளில் யார் வருவார்
மக்கள் கண்ணீர் யார் துடைப்பார்
நரகம் போகும் பாவிகளை
நாயனை கெஞ்சி யார் தடுப்பார்
இறைவன் சமூகம் மன்றாட நபி
இரஸூல் தவிர யார் அங்கு உண்டு
மண்மேல் வாழ அவர் வழிவேண்டும்
மரணிக்கும் போது அவர் பெயர் வேண்டும்
கப்ரில் கூட அவர் ஒளி வேண்டும்
கடைசி வரைக்கும் அவர் துணை வேண்டும்
எல்லா உயிரும் அஞ்சிடும் நாளில்
இதயம் நடுங்கா ஓருயிர் நீரே
அர்ஷில் நடந்த நாயகமே
சுவனம் தேடும் சோபிதமே
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!
முல்லை விதைத்தார் பாதையிலே
கல்லால் அடித்தார் மேனியிலே
நபிகள் குடும்பம் வாடிடவே
பிரித்தே வைத்தார் ஊர் வெளியே
கொடியோர் கொடுமை செய்தாலும் நபி
கோபம் கொண்டே சபித்ததுமில்லை
அமரர்கள் இறங்கி அனுமதி கேட்டும்
அழித்து விடாமல் காத்த ரஸூலே
இறைவனின் கோபம் இறங்கி விடாமல்
அவனிடம் வேண்டி அழுத ரஸூலே !
அன்பே வடிவாய் ஆன ரஹீமே
அருளே மணமாய் அமைந்த ரவூஃபே
அரசருக்கரசே! யாநபியே!
தரிசனம் தருவீர் மாநபியே!
யாரஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்!
யாகரீமல்லாஹ்! யாரஹீமல்லாஹ்!
நூருக்குள் நூரான நூரே முஹம்மதியா
நூருக்குள் நூரான நூரே முஹம்மதியா
நுபுவத்தின் முத்திரையை முத்திடுவோம் வாருங்களேன்
கண்ணீரும் கரைந்தோட கண்மணியின் தர்பாரை
களிப்போடு காண்போமே அன்பான சோதரரே
( நூருக்குள் )
முதலாம் வசந்தமாம் ரபீயுல் அவ்வலிலே
முழுமதியாய் தோன்றிய முத்திரை நபி யழகே
ரஹ்மானின் புண்ணிய நேசராய் வந்தீரே
ரஹ்மத்துலில் ஆலமீனாய் ஆலத்தில் அவதரித்தீர்
அங்கம் கமழ்ந்திட பங்கம் மறைந்திட
அவதாரமாய்ப் பிறந்தீர் அன்பான ஆன்றலரே
( நூருக்குள் )
உங்களை யாசித்தோர் ஆஷிக்காய் மனம்பெற்றோர்
உங்களை வெறுத்தோர்கள் வெதும்பியே போனார்கள்
மன்னரே மஹ்மூதே முஸ்தபா மா நபியே
மலர வைப்பீர் எங்களையும் ஆஷிக்கீன் கூட்டத்திலே
தாஜுல் முத்தகீனே தாஹவே தவப்பொருளே
தலையினில் கிறிடமாய் சூட்டிடுவேன் தங்களையே
( நூருக்குள் )
இறை நெருக்கம் கிடைத்திட்ட மிஃராஜின் நேரத்திலும்
இறை சமுகம் நம்தனையே நினைந்துருகிய நாயகமே
நரகத்தில் பெண்ணின்நிலை கண்டு மனம் வெதும்பி
நாவதை பேணிக்கொள் நவின்றீர்கள் நாயகமே
பெண்மகவே என் மகள்தான் காத்தீரே பெண்ணினத்தை
பெருமானே உங்கள் புகழ் பாடி மகிழ்திடுவோம்
( நூருக்குள் )
ஸிராத்தென்னும் பாலமதை மின்னலென யான் கடக்க
சிறப்பான முந்தானையை தருவீர்கள் கோமானே
அர்ஸினை அலங்கரிக்கும் அல்லாஹ்வின் ஜோதியினை
அகங் குளிர முகம் மலர பார்த்திடனும் பார்த்திபரே
அல்லாஹ் நீ உகந்திடும் உயிரான உத்தமரின்
அருகினில் யாமிருக்க வரம் தருவீர் நாயகமே
ஷரீஅத்தின் நெறிமுறையை சருகாமல் நிறுத்திய
ஸாதாத்தாம் குருநாதர் முஹியித்தீன் ஆண்டகையின்
திருப்பாதம் எம்தோளில் சுமந்திட ஆசிக்கிறோம்
வலிமார்கள் கூட்டதில் சேர்த்திட யாசிக்கிறோம்
இகபர வாழ்வெல்லாம் இறையன்பும் நபியன்பும்
இறைஞ்சியே கேட்கின்றோம் தந்திடுவாய் ரஹ்மானே
( நூருக்குள் )
ஆதி நாயனின் தூதே எம்மை ஆதரிக்கும் மஹ்மூதே
ஆதி நாயனின் தூதே
எம்மை ஆதரிக்கும் மஹ்மூதே
காலமெல்லாம் உம்மை மதிப்பேன் மதிப்பேன்
ஹாத்தமுன் நபி புகழ் இசைப்பேன் இசைப்பேன்
பாவி நான் கரை சேர
நல்ல பாதையை நவின்றீரே
( ஆதி நாயனின் தூதே )
நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவே நினைவே
கெஞ்சுகிறேன் தங்கள் பரிவை பரிவை
பஞ்சமா பாதகத்தை
விட்டும் அஞ்சி வாழ்திட செய்தீர்
( ஆதி நாயனின் தூதே )
காருண்யரே எங்கள் உயிரின் உயிரே
தாருமைய்யா உங்கள் தயவை தயவை
தீதகன்று வாழ
உள்ளத்தூய்மை தந்தருள்வீரே
( ஆதி நாயனின் தூதே )
பா சொல்லும் தீனின் மகவின் மகவின்
பாவச் செயல் எல்லாம் மாய மாய
பண் பாடும் தீனோர் எவர்க்கும்
அல்லாஹ் பாவமறச் செய்வாயே
ஆதி நாயனின் தூதே
எம்மை ஆதரிக்கும் மஹ்மூதே
எம்மை ஆதரிக்கும் மஹ்மூதே
எம்மை ஆதரிக்கும் மஹ்மூதே
அண்ணலே என் ஆருயிரே
அண்ணலே என் ஆருயிரே
அன்பின் உறைவிடமே
மன்னரே மறையோனின் தூதே
மாசிலா மணியே
தேடுகின்றேன் தங்களை நான்
நேசரே நபியே வாசனை கமழ்
மேனியோரே மோட்சம் அருள்வீரே
( அண்ணலே )
திங்களெனும் பூமுகம் நான் காண்பதென்னாளோ
அமுத மொழிகள் எந்தன் செவிகள் கேட்பதென்னாளோ
உங்கள் மன்றில் அமர்ந்து ஞானம் பெறுவதென்னாளோ
உங்கள் பாதம் முகர்ந்து கண்கள் குளிர்வதென்னாளோ
( அண்ணலே )
கல்பிலே நிறைந்தோடும் ஆவல் விரைவில் தீராதோ
காதலால் என் உள்ளம் மெழுகாய் உருகிபோகாதோ
உங்கள் பார்வை மேவி எந்தன் நிலையும் மாறாதோ
உங்கள் புகழை பாடும் கணமென் உயிரும் அணையாதோ
( அண்ணலே )
தாஹா ரஸூலே தனியோனின் தூதே எப்போது நான் காண்பது
தாஹா ரஸூலே தனியோனின் தூதே
எப்போது நான் காண்பது
வாகான உங்கள் மலர் பாதம் காண
என்னுள்ளம் இங்கே ஏங்குதே
( தாஹா ரஸூலே )
தங்கத்திரு மக்கப் பதி மீதில் ஒரு வானின் நிறை
திங்கள் என வந்துற்ற நல் மா முஸ்தபா
கத்தன் இறைவன் சுத்தச் சுடரே
கந்தம் கமழும் பொங்கும் எழிலே
சித்தன் தனில் முத்தம் என நித்தன் திகள்
கோமானே இங்கே நான் பாடும் பாட்டில்
பூவாச மேற்றும் பெருமாண்பு சான்ற
யாஸீனே ஏந்தல் தாஸீன் நீரே
( தாஹா ரஸூலே )
துங்கம் மிகு முந்தன் மறை எங்கும் பிரசங்கம் பெற
தேனின் உரையே நல்கிய மா முஸ்தபா
திட்டித் திரிந்த தீயர் பகையோர்
கட்டித் தழுவும் பண்பை யளித்தீர்
துட்டக் குஃபிர் மொத்தப் படை மட்டித்திட
போராடி அன்று பொல்லாங்கு வென்று
படி மீது தூய பொன் மார்க்கந் தந்த
யாஸீனே ஏந்தல் தாஸீன் நீரே
( தாஹா ரஸூலே )
வானின் கரு மேகக் குளம் வடிவாகவே குடை ஏந்திடும்
வள்ளல் திரு எம்மான் நபி யா முர்தழா
உள்ளத்திரையில் உங்கள் மொழிகள்
மெல்லப் படர செல்லும் கறைகள்
பள்ளந்தனில் பாய்ந்தோடிடும் வெள்ளம் என
பெருமானே உங்கள் மீதான தாகம்
புவி மீது என்று எவ்வாறு தீரும்
யாஸீனே ஏந்தல் தாஸீன் நீரே
( தாஹா ரஸூலே )
அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே
அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே
அந்த ஆவலினால் காவலின்றி இதயம் வாடுதே
நீரிருக்கும் தாமரை போல் நெஞ்சம் மலருதே
அண்ணல் நேசத்துக்கும் பாசத்துக்கும் கண்கள் ஏங்குதே
யார் இதனை அங்கு வந்து எடுத்துச் சொல்வது
உங்கள் அழைப்பிற்காக எனது மனம் ஏங்கி துடிக்குது
இறுதி தூதின் நுபுவத்தொளிரும் தங்கள் முதுகிலே
முத்தமிடுவதற்கும் தொடுவதற்கும் இதழ்கள் துடிக்குதே
தாயிஃப் நகர் கல்லடிகள் தந்த தழும்பிலே
இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே
கஸ்தூரி மனம் கமழும் தங்கள் மேனியை
இந்த கண்களாலே பருகுகின்ற ஆவல் தழும்புதே
புஷ்பங்களின் மகரந்தமாய் மதீனப் புழுதியில்
நான் புரள வேண்டும் உருள வேண்டும் போலிருக்குதே
அல்லாஹ் முஹம்மது அன்பால் இணைந்தது
வாய் திறந்தால் அல்லாஹ்வென வாய் திறப்பேன்
உம்மென இருந்தால் முஹம்மதென மௌனமாய் கிடப்பேன்
கண் திறந்தால் கஃபாவை காண்பதற்கே துடிப்பேன்
கண் மூடினால் மதீனாவின் கனவுகளில் மிதப்பேன்
உலகத்தை நேசிக்கும் பேதையரே இன்ப
பேரின்ப சுகம் காண வருவீரோ
அல்லாஹ் முஹம்மது அன்பால் இணைந்தது
இரண்டுமே ஒன்று அல்ல என்றாலும் வேறு அல்ல
என்முகம் கண்டவர் இறைவனைக் கண்டார்
என்பது நபி மொழி வார்த்தையன்றோ
நபி சொல் கேட்டவர் என் சொல் கேட்டார்
என்பது இறைவனின் ஆயத்தன்றோ
அண்ணலின் இதயம் வாழும் அல்லாஹ்வை தேடுவேன்
அவனுக்குள் குடி புகுந்த பெருமானை பாடுவேன்
குர்ஆனின் நாவெடுத்து குணநபியைப் போற்றுவேன்
கோமானின் சொல்லெடுத்து வல்லோனை வாழ்த்துவேன்
ஜம்ஜம் நீர் பருகும் போது கௌதரை நான் எண்ணுவேன்
தொழுகையில் மிஃராஜுக்கு நபியுடன் தான் செல்லுவேன்
ஒரு வரம் தான் தருவேனென்றால் நபியை மட்டும் வேண்டுவேன்
உலகத்தை வெறுப்பாய் என்றால் நபியை வைத்துக் கொள்ளுவேன்
வானுலகக் கூட்டணிக்குள் நானும் ஒன்றுக் கூடுவேன்
வள்ளல் மீது ஸலவாத்தோத வல்லோனுடன் சேருவேன்
ஸலவாத்தின் ஓசை கேட்டு கோள்கள் ஆடக் காண்கிறேன்
அர்ஷோடு குர்ஸில் கூட அருள் மயக்கம் பார்க்கிறேன்
அண்ணலுக்காய் படைத்த உலகம் அதிலே நாமும் வாழ்கிறோம்
அவர்களுக்காய் படைத்த பொருளை அனுபவித்து போகிறோம்
நபிகளின் வருகைக்காக உலகம் முன்னர் இருந்தது
நபிகளின் புகழை பேச உலகம் இன்னும் இருக்குது
மனிதரோடு மனிதராக நபிகள் தோற்றம் இருந்தது
மலக்குகளின் தலைவரோடு பேச்சும் அங்கு நிகழ்ந்தது
இறைவனின் அடிமை என்று புனித நாவு உரைத்தது
எனது ஹபீபு நீங்களென்று இறையின் வாக்கு ஒலித்தது
கதீஜா நாயகியின் மீதன்பு கொண்டவர் புகழை ஓதிடுவோம்
கதீஜா நாயகியின் மீதன்பு கொண்டவர் புகழை ஓதிடுவோம்
கருணை பெறுவோமே புவிமீதில்
கருணை பெறுவோமே புவிமீதிலே வாரீரே பாரோரே
( கதீஜா நாயகியின் )
கண்ணிய நபியை கடிமணம் செய்திட எண்ணிய நாயகியாம்
எத்தவம் புரிந்தோ இத்தலம் மீதில் முத்தொளியை மணந்தார்
அன்பாசை மீறிடவே நபியை மண் மீதில்
அன்பாசை மீறிடவே நபியை மண் மீதில் நாயகராய் அடைந்தார்
( கதீஜா நாயகியின் )
முதல் பல கொண்டே வணிகம் செய்தார் பெருலாபம் கண்டார்
முதலாய் நபிக்கே மணையாய் அமைந்தே அதிலும் லாபம் கண்டார்
இன்பம் மிகக் கொண்டே நம் நபியின்
இன்பம் மிகக் கொண்டே நம் நபியின் அன்பில் நனைந்தாரே
( கதீஜா நாயகியின் )
அண்ணல் பெருமான் அரியணை அகந்தனில் அமர்ந்தகம் மகிழ்ந்தாரே
அகமுக மலர்ந்திட அண்ணலை கண்ணென கண்டு மகிழ்ந்தனரே
பண்ணாலே பாடிடுவோமே பாசநபியின்
பண்ணாலே பாடிடுவோமே பாசநபியின் பாவையராம் அவரை
( கதீஜா நாயகியின் )
செழுந்தீன் செழித்திட செம்மலர் மகிழ்ந்திட செல்வம் ஈந்தனரே
பொன்னும் பொருளும் இன்னும் பலவும் ஈந்தகம் குளிர்ந்தனரே
அண்ணலின் எண்ணம் மின்னிட தன்னைத்
அண்ணலின் எண்ணம் மின்னிட தன்னைத் தந்து மகிழ்ந்தனரே
( கதீஜா நாயகியின் )
ஹீரா சென்றே சீராய் நபிக்கு பணிவிடை செய்தனரே
ஓதுக வென்றொரு சொல் நபிக் கேட்டு போர்த்துக என்றனரே
போர்த்தி பொங்குக மங்களம் நன்னபி
போர்த்தி பொங்குக மங்களம் நன்னபி என்றன்னை மொழிந்தனரே
( கதீஜா நாயகியின் )
பைங்கிளி பாத்திமா ஜைனும் முகுல்தூம் ருக்கையா அன்னையரே
மறை மொழிக் கூறிடும் அகில மீதில் மகி முஃமின் அன்னையரே
முன்னோனிறை முகமன் ஏற்றீரே
முன்னோனிறை முகமன் ஏற்றீரே முத்து கதீஜா நாயகியே
( கதீஜா நாயகியின் )
துக்கமகற்றி துரத்திடும் நபிகள் துயரமடைந்தனரே
என்னைப் பிரிந்தார் அன்னை கதீஜா என நபி அழுதனரே
அல்லாஹ் ஆறுதல் கூறி நபியை
அல்லாஹ் ஆறுதல் கூறி நபியை அருகே அழைத்தானே
( கதீஜா நாயகியின் )