Posted by : kayalislam
Wednesday, 9 November 2011
ஆதி அருள் கணிந்திளங்கி
அமரர் ஜிப்ரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு
நிறைவளித்த குர்ஆனாம்
( ஆதி அருள் )
மெய்யுணர்வின் நல்லடியார்
மேதினியில் வாழ்வதற்கே
ஐயமற வழி காட்டும்
ஆண்டவனின் திருமறையாம்
( ஆதி அருள் )
மக்கா நகர் அருகிருக்கும்
மழைக் குகையாம் ஹீராவில்
தக்க நபி மனம் குளிர
தழைதுயர்ந்த திருமறையாம்
( ஆதி அருள் )
வான் கமழும் ராமலானாம்
வளம் கொழிக்கும் திங்களிலே
தீன் கமழ வந்துற்ற
திகழொளியின் திருமறையாம்
( ஆதி அருள் )
கதி அளிக்கும் லைலத்துல்
கதிர் இரவில் இறை அளித்த
நிதி அனைத்தும் கொண்டிலங்கும்
நிகரில்லா திருமறையாம்
( ஆதி அருள் )