Posted by : kayalislam Tuesday, 22 November 2011


இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
                                                                                                                 ( இறைவனிடம் )

இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்
இன்னல் பட்டு எழும் குரலை கேட்க்கின்றவன்
எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்
                                                                                                                 ( இறைவனிடம் )

ஆசையோடு கேட்பவர்க்கு அள்ளித் தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களை கில்லி எறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறை அனைத்தும்
சொல்லிக் காட்டுங்கள்
அன்பு நோக்கு தருகவென்று அழுது கேளுங்கள்
                                                                                                                 ( இறைவனிடம் )

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்ப்பவன்
அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலை வணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்
                                                                                                                 ( இறைவனிடம் )

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.