Posted by : kayalislam Wednesday, 9 November 2011


அனைத்தும் படைத்து காத்து ஆளும் ஆண்றவல்லநாயகா
நினைந்து பணிந்து இறைஞ்சிகிறோம் நினது கருணை ஈகுவாய்
                                                                                                                                             (அனைத்தும் படைத்து)

ஏழை எமது மனதிற் படியும் பாவக் கறைகள் நீங்கவே
ஏழை எமது மனதிற் படியும் பாவக் கறைகள் நீங்கவே
சீலம் பொதிந்த உனது மறையின் சிறந்த ஞானம் புகட்டுவாய்
எரியும் தணலின் நரகில் உழல இழிந்த நெறியைக் காட்டிடும்
வரிய குணத்தின் கொடிய குழுவில் கலந்திடாமல் மீட்டுவாய்
                                                                                                                                             (அனைத்தும் படைத்து)

பத்ரு உஹது தளத்தில் குஃப்ரின் படைகள் திணற வீழ்த்தியே
பத்ரு உஹது தளத்தில் குஃப்ரின் படைகள் திணற வீழ்த்தியே
உதிரம் சொரிந்த ஷுஹதா குலத்தின் உறுதி நெஞ்சில் நாட்டுவாய்
படிந்த மனதின் பாவக் கறையால் பெரிதும் துயரில் மூழ்கினோம்
பாவ வினையில் உழலும் எங்கள் பாவம் பொறுத்தே அருளுவாய்
                                                                                                                                             (அனைத்தும் படைத்து)

மருண்டு விழிக்கும் மரண பொழுதில் மணக்கும் கலிமா நாவிலே
மருண்டு விழிக்கும் மரண பொழுதில் மணக்கும் கலிமா நாவிலே
உருண்டு முழங்க நினைவிற் புழங்க உனது உதவி நல்குவாய்
மஹ்ஷர் வெளியில் இறங்கி உதவும் மதீனப் பதியின் ஏந்தலர்
மகிமை நபியின் முஹப்பை எமது மனதில் நிலைக்கச் செய்குவாய்
                                                                                                                                             (அனைத்தும் படைத்து)

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.