Posted by : kayalislam
Wednesday, 9 November 2011
நபி மொழி இங்கே கேளுங்கள்
நன்றாய் நீங்களும் வாழுங்கள் (x2)
நன்மைகள் என்றும் மலரட்டுமே
நாளும் தீமைகள் அழியட்டும்! அழியட்டும்!
( நபி மொழி x2 )
ஒரு கைக்கு ஒரு கை
உதவுதல்போல் உலகில் வாழும் முஸ்லிம்கள்
ஒரு கைக்கு ஒரு கை
உதவுதல்போல் உலகில் வாழும் முஃமீன்கள்
ஒருவர் கொருவர் மற்றோர் முன்
உதவுதல் வேண்டும் நபிமொழியாம்
ஒருவர் கொருவர் மற்றோர் முன்
உதவுதல் வேண்டும் நபிமொழி! நபிமொழி!
( நபி மொழி x2 )
பசிக்கும் வயிற்றிற்கு உண வளித்தல்
பாரினில் உயர்ந்த அறமாகும் (x2)
பசிக்கும் அனுவிற்கு உண வீயும்
வள்ளல் முஹம்மது மணிமொழியாம்
பசிக்கும் அனுவிற்கு உண வீயும்
வள்ளல் முஹம்மது மணிமொழி! மணிமொழி!
( நபி மொழி x2 )
சிறுவர் இடத்தில் இறக்கமிள்ளார்
சீராய் பெரியோரை மதியாதார் (x2)
நெறியில் எம்மைச் சாராதார்
நினைவில் நிற்கும் நன்மொழியாம்
நெறியில் எம்மைச் சாராதார்
நினைவில் நிற்கும் நன்மொழி! நன்மொழி!
( நபி மொழி x2 )
பிறரைக் கெடுத்து புறம் பேசல்
பிறரால் விளையும் பழியை விட (x2)
உரு பெரும் குற்றம் என்பது நம்
உத்தமர் உம்மி உயர்மொழியாம்
உரு பெரும் குற்றம் என்பது நம்
உத்தமர் உம்மி உயர்மொழி! உயர்மொழி!
( நபி மொழி x2 )