Posted by : kayalislam
Tuesday, 22 November 2011
யா நபியே! யாநபியே! எங்கள் முஹம்மதுவே!
யா நபியே! யாநபியே! ஏகன் ரஸூல் நபியே!
நாயகமானவரே நல்ல இரஸூல் நபியே!
தாயகமாய் என் கையை தயவாய் பிடித்தருள்வீர்
தாங்களின்றி எனக்குதவி தயவு செய்ய யாருமில்லை
பாங்காக நான் ஒதுங்க பண்புடையோர் யாருமில்லை
நீங்களே நேர்வழிக்கு நிறப்பமுள்ள நல்லொளிவாம்
ஓங்கும் கொடையின் சிர்ரே உகப்பான நன்னபியே!
ஊன்றுதலாய் பிடிப்பதற்கு உகந்த நலமானவரே
தூண்டா மணிவிளக்காய் துலங்குகின்ற யாநபியே!
ஹக்காய் படைப்புகளை காப்பாற்றும் இரட்சகரே!
மக்காதனில் பிறந்த மதனிய்யே யாநபியே!
நேர்நடத்தும் ரப்பளவில் நிலத்திலுள்ள ஜின்மனுவை
சீரான மோட்சமதில் தெளிவாக்கும் யாநபியே!
மஹ்மூதெனும் தலத்தில் மன்னானுடன் தனித்து
வெகு மகிமை காட்சி பெற்ற வேதாம்பர் யாநபியே!
தந்தை தாய் தாரம் சந்ததியுமில்லானை
சொந்தமுடன் காட்சி பெற்ற தூதாங்கர் யாநபியே!
வாகாய் விரல்களிலே வரவழைத்த நன்னதியால்
தாகங்கள் தீர்த்து வைத்த தாஹா ரஸூல் நபியே!
மறுமையிலே வருந்தாகம் வருத்தமெல்லாம் உங்களுட
கருணையால் மாற்றி வைப்பீர் ஹாமீம் ரஸூல் நபியே!
திடுக்கமாய் எனை நோக்கி தீண்டுகின்ற தங்கடங்கள்
இடுக்கம் தனிலும் சொல்வேன் என் ஸெய்யிதே நபியே!
சாதாத்துகளானவர்க்கு ஸெய்யிதே என் ஸனதீ
ஆதரவாய் வந்துதித்த அஹ்மதுவே யாநபியே!
எளியோன் தன் செய்பிழையை இறையோனும் தான் பொறுக்க
தெளிவான மன்றாட்டம் செய்வீர்கள் யாநபியே!
நித்திய சுகம் பெறவே நேசமாய் என்பேரில்
முக்தி தந்தருள்வீர்கள் முஹம்மதுவே யாநபியே!
மாறாமல் எப்பொழுதும் மகிழ்ச்சியால் என்னளவில்
நேர் பொருந்தும் கண்ணாலே நீர் பாரும் யாநபியே!
உங்கள் மகிமைக் கொண்டு ஊழி நாள் செய்பிழையால்
பங்கப்படுத்தாமல் பலன் தருவீர் யாநபியே!
உங்களில் நின்றுமுள்ள உகப்பான பொறுக்குதல் தான்
எங்களை பொதிந்து கொள்ள இறங்குவீர் யாநபியே!
மன்னரே! உமையன்றி காண்கிலேன் என்தனக்கு
பெருத்த பிழை பொறுத்து பேணுவீர் யாநபியே!
தாகமாய் வான் கடந்து சிறப்பான அர்ஷளவில்
வாஹிதாய் இருக்கும் ரப்பை வசனித்த யாநபியே!
எனக்குதவியான நல்ல இன்பமுள்ள வஸீலாவே
மனக்கவலை தீர்க்குமெங்கள் வள்ளலே யாநபியே!
ஜமாலுள்ள ரப்பு உம்மை தன்னொளிவால் தான் அமைத்தான்
கமால் முழுதும் பெற்று வந்த காரணரே யாநபியே!
உங்களைப் போல் ஒரு படைப்பை உடையோன் படைக்கவில்லை
எங்கள் நபியாக வந்த ஏற்றமுள்ள யாநபியே!
எல்லா படைப்புகட்கும் ஏற்றமுள்ள தங்கரிப்பே
நல்ல வழிகாட்டும் நாயகரே யாநபியே!
எல்லா படைப்புகட்கும் ஏற்றமுள்ள தங்கரிப்பே
நல்ல வழிகாட்டும் நாயகரே யாநபியே!
அல்லாஹ் என் பிழையை அன்பாய் பொறுப்பதற்கு
அல்லும் பகலுமுங்கள் ஆதரவே யாநபியே!
இப்படியே என்னுடைய இருதயத்தில் நல்லுறுதி
தப்பாமல் எந்தனக்கு தந்தருள்வீர் யாநபியே!
உயிருள்ள நாள் அளவும் உங்கள் புகழ் மத்ஹால்
கைர் பெருக தந்தருளும் ஹாத்தீம் ரஸூல் நபியே!
அர்ஷுடைய ரப்பான அல்லாஹ்வின் திருமுகத்தை
பிரிசமுடன் கண்காட்சி பெற்றோரே யாநபியே!
மட்டுதிட்டு எண்ணமின்றி மன்னான் ஸலாமுடனே
இஷ்ட ஸலவாத்துமக்கே இறைகிருபை யாநபியே!
எக்காலமாக இந்த ஏற்றமுள்ள ஸலவாத்து
ஹக்காக வந்திறங்கும் ஹாதி ரஸூல் நபியே!
கொடைமிகுந்த ஆட்களுக்கும் குத்பான தோழருக்கும்
உடையோன் கிருபையுண்டாம் உதவி செய்வீர் யாநபியே!
எடுத்து படிப்பவர்க்கும் இன்பமாய் கேட்பவர்க்கும்
தொடுத்தோர் அனைவர்க்கும் துணை செய்வீர் யாநபியே!
நாயகன் மலக்கான நலமான ஜிப்ரீலு
ஆயும் வஹீ செலுத்தும் அஹ்மதுவே யாநபியே!
ஹக்கன் ஸலவாத்து நித்தம் ஹைரான யாநபியே!
முக்கியமாய் உங்களுக்கு மொழிகின்றோம் யாநபியே!
வானின் திசையில் நின்றும் வழங்கும் மீன்களுள்ள மட்டும்
மானின் பிணை நபியே மகிமை உங்கட்கே நபியே!
உற்ற ஸலவாத்தின் உகந்த பைழானதுவே
அச்சமின்றி உங்களுக்கே அருள்கின்றோம் யாநபியே!
தனதாக கண்காட்சி தாத்தொளிவை கண்டு வந்த
இனிதான நபிபேரில் இறையே ஸலவாத்துரைப்பாய்
சிறப்பான கஃபாவில் தெளிவாக வந்துதித்த
நிறப்பமுள்ள அஹ்மதுவே நெறிநேசரே நபியே!
மலக்கான ஜிப்ரீலு மகிமை நா உரைத்த கவி
துலக்கமாய் படிப்பவர்க்கு துய்யோன் ரஹ்மத்துண்டாம்
துய்யோன் முஹம்மதுவின் துலங்கும் ரவ்ழா மதலில்
மெய்யாய் எழுதப்பட்ட விளங்கு கவி நற்பொருளே