Posted by : kayalislam
Sunday, 2 September 2012
லாயிலாஹ இல்லல்லாஹு
லாயிலாஹ இல்லல்லாஹ்
லாயிலாஹ இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
முபஸ்மிலன் முஹம்திலன்
முஸல்லியன் முஸல்லிமா
அலன்னபீவல் ஆலிவல்லஸ்
ஹாபி ஸித்தி ஃபாத்திமா
மர்ஹபன் வமர்ஹபன்
அஹ்லன் வஸஹ்லன் தாயிமா
லில்முஸ்தபா வல்முர்தழா
வபுனாகுமா வல்ஃபாத்திமா
ஆதியான நாயனுக்கு
அடங்கலான புகழுமாம்
நீதியான நபிதமக்கு
நித்தமும் ஸலவாத்துமாம்
பரகத்தான நாயகி
பதூலெ ஸஹ்றா ஸித்தினா
ஹரக்கத்தான ஸல்லத்தை
யகற்றி வைப்பீர் ஃபாத்திமா
தங்கமான தவ்லத்தே
தயாளமான ரஹ்மத்தே
பங்கமான பாவத்தை
பறக்க வைப்பீர் ஃபாத்திமா
ஃதனாவுக்குரிய தாயாகி
தவாபுக்குரிய நாயகி
தரணியெல்லாம் தான் புகழும்
தாஹா மகளாம் ஃபாத்திமா
ஜாகுபெற்ற அலியுல்லாஹ்வின்
ஜாதியான செல்வியாம்
ஷாஹூ ஆலம் ஷாபிய்யின்
சந்ததியாம் ஃபாத்திமா
ஹஸன்ஹூஸைன் வமுஹ்ஸினை
அழாக பெற்ற மாதாவே
கஸ்தியான கருமம் நீக்கி
காத்தருளும் ஃபாத்திமா
காலிக்குகந்த கண்மணி
கைறான நபியின் கபிதத்தே
மாலிக்கான மன்னரின்
மகராஜ் பெற்ற ஃபாத்திமா
தருமம் மிகுந்த தாபரமே
தயவு செய்யுந் தருணத்தில்
வறுமம் பண்ணும்வம்பரை
வதைசெய்வீர்கள் ஃபாத்திமா
தாத்தின்னொளிவில் லுதித்தவொளிவால்
தரித்தவொளிவே நாயகி
காத்திம்நபியின் பிலுஅத்தே
கைருன்னிஸாவே ஃபாத்திமா
ரஹ்மத்தான ரஹ்மில்
நின்றும் இரட்சிப்போ ரனந்தம்பேர்
தகுமதான குதுபுமார்கள்
தரித்த ஸித்தி ஃபாத்திமா
ஜஹ்றா பீவி ஜீனத்தாய்
சமானமற்ற நாயகி
துஹ்ரத்தாக துதிக்கும் நாயன்
தூய ஸித்தி ஃபாத்திமா
சுவர்க்கந் தன்னில் ஸூரத்தாய்
துலங்கிநின்ற நாச்சியார்
எவருக்கும் பாவா வான
ஆதம் ஏகிகண்ட ஃபாத்திமா
சிரசில் தாஜும் கழுத்தில்
சவடி சிறப்பா இரண்டு காதிலும்
சிறக்கத் துலிக்கப் போட்டு துலங்கும்
சிறந்த ஸித்தி ஃபாத்திமா
சந்தல் மணமாம் அந்தத் தாஜூ
ஸாஹிபுல் பழீலத்தி
அன்த ஸூரத் தில்லமைந்த
ஐவராகும் ஃபாத்திமா
லல்லத்தான சொல்லை நீக்கி
ஷறயின் வழியில் கைறை நல்கி
இல்லத்தான மருளைப்போக்கி
ஈடேற்றம் செய்யும் ஃபாத்திமா
தையிபான அப்துல்லாஹ் தன்
கூடபிறந்த காஸீமாம்
ஸைனபு வஉம்மு குல்துமாம்
வஸைனப் ருகையா ஃபாத்திமா
லில்லில் லிவாவில் சேர்த்தருளும்
சித்தமான ஹழரத்தில்
அல்லலகற்றி யாண்டருளும்
ஆதி ஸித்தி ஃபாத்திமா
அர்ஷிடத்தில் அலிதமக்கு
அமரர் கூடும் மஜ்லிஸில்
கருதி பெறவே மங்களக்
கலியாணஞ் செய்த ஃபாத்திமா
ஙைபில் குறித்த மஹர் தமக்கு
கோமானினைத்த ஷபாஅத்து
ஐபான பெண்கள் பாவங்களை
அழிக்கும் ஸித்தி ஃபாத்திமா
ஃபாத்திமாவின் மகள்மகவே
ஃபாத்திமாவின் மகந்தனக்கு
காத்திமான நபிமுடித்த
கண்குளிர்ந்த ஃபாத்திமா
குர்றத்துல் ஐனைனியாம்
குறைஷி குலத்தின் தீபமாம்
தர்றுன்வதமறத் துல்கதீஜா
தங்கமகளாம் ஃபாத்திமா
கறமலிய்யுல் லாதமக்கு
காதலி யிருக்கையில்
ஹறாமதாகும் மறுபெண் முடிக்க
அறியும் ஸித்தி ஃபாத்திமா
லய்ஸலீ ஷய்வுன் ஸிவாக்கி
லாயிகான ஹழரத்தில்
கையைப்பிடித்து காதிரிய்யில்
காட்சிகாட்டும் ஃபாத்திமா
மலக்கு ஜிப்றயீலைக் கண்டு
மனதால் சொன்ன சொல்லுக்கு
கலக்கமகற்றி ஸித்கை யறிந்து
காட்சி பெற்ற ஃபாத்திமா
நாச்சியாரின் மத்ஹை வோது
நாட்டந்தீரும் நாள்தோறும்
ஹாஷிமாம் மன்றாட்டஞ் செய்யும்
அரசி ஸித்திஃபாத்திமா
வரிசையான ஆயிஷாவும்
வஸையால் வார்த்தை சொன்னதால்
பிரிசமாக நபியை மேலால்
பேசும் ஸித்தி ஃபாத்திமா
ஹாதியான வழியிலருளும்
ஹாவு வாவு இரண்டையும்
காத்திமான அப்துல்லாஹ்வை
காக்கும் ஸித்திஃபாத்திமா
லாமலாத லீ ஸிவாக்கி
லாஸிமாலி வாவினில்
ஆமதாக்கி ஹழரத்துல்
பகாவிலாக்கும் ஃபாத்திமா
ஏழைமனுக்கள் கேட்கும் துஆவை
ஏற்றுக்கொள் யாஃபாத்திமா
நாளை மஹ்ஷர் வேலையில்
நஜாத்தை தருவீர் ஃபாத்திமா
வஸ்ஸலாமு மின்ஸலாமின்
மஃஸலாத்தின் தாயிமா
அலா அபீகி வஅலைக்கி
ஆலி ஸித்தி ஃபாத்திமா
காலஹாதா யிபுனுமன்
கலீபத் ஷெய்கு பூக்கோயா
குதுபுஸ்ஸமானி பழ்லுல்லாஹி
ஸிப்தி ஸித்தி ஃபாத்திமா