Posted by : kayalislam Tuesday, 11 September 2012


மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

அல்ஹம்துலில்லாஹி ஹம்தந் தாயிமன் அபதா
வல்ஹம்துலில்லாஹி தும்மல்ஹம்துலில்லாஹி
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன அலா
மாகான யுல்ஹிமுனி அல்ஹம்துலில்லாஹி

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

இன்றெடுத்த இப்பணியும் இனிதொடரும் எப்பணியும்
நற்பணியாய் ஆவதற்கு நன்நபியின் நல்மகளே
எம்முடனே நீரிருந்து தம் அருளை மிகப்பொழிந்து
நிம்மதி நலம் தருவீர் நும்அடிமை வேண்டுகிறேன்

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

கற்குங்கலை அமுதாக்கி நற்குணத்தை எமதாக்கி
தற்புகழ்ச்சி இலதாக்கி கற்புநெறி நிலைக்கச்செய்வீர்
பொற்கால ஙொஜ்ஜாலியாய் நற்கால முஹியித்தீனாய்
தற்காலம் எமை அமைப்பீர் ஃபுர்கான் புகழ் ஃபாத்திமத்தே

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

நன்நஃபீஸத் மிஸ்ரியாவாய் மென்மைமிகும் ராபியாவாய்
இன்புறவே எமை அமைப்பீர் மன்னான் புகழ் ஃபாத்திமத்தே
கண்ணுறங்கும் வேலையிலும் கல்புறங்கா நபிமகழே
கண்ணியமாம் ரிஜ்குதனை கணக்கின்றி கொடைதருவீர்

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

எங்களினம் சுற்றங்கட்கும் எம்முடைய தோழர்கட்கும்
உங்களைப்போல் என்குமுண்டோ உதவி உபகாரமுள்ளோர்
நன்கொடையாய் எம்முடைய நாட்டப்படியே இஹ்சான்
முன்கை பொருள்தந்து மிடிதீரும் ஃபாத்திமத்தே

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

பேருதரவேணுமம்மா பேணிபிழை போக்குமம்மா
மாராயம் தந்தெமது மனக்கவலை தீருமம்மா
பாருமம்மா இவ்வேலை பகரும் மொழி கேளுமம்மா
தாருமம்மா உங்கள் பதம் தையான் புகழ் ஃபாத்திமத்தே

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

வெற்றிபெறச் செய்திடுவீர் வேண்டும் உபகாரம் செய்வீர்
முக்திக்கருள் புரிவீர் முஹம்மதிரஸூல் மகவில்
எத்தவத்தினோர்களுக்கும் ஏற்றமுள்ள சர்குருவாய்
பற்றிப் பிடித்தேனம்மா ஃபாத்திமத்து நாயகியே

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

மரியாதை இல்லாத மனுக்கள் இழிவாக எம்மை
பரியாசமே புரிந்து பழித்து பலவாறுரைத்து
சிரியாமல் காத்து எம்மை ஜகத்தில் சகலோர்க்கு முன்னே
சரியா இருக்கவருள் சித்தி நிஸ்வான் ஃபாத்திமத்தே

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

நாதனருளால் உலகில் நாலேழ் வயதிருந்து
நீதி ரமழான் மூன்றில் நிறைந்த தினம் செவ்வாயில்
ஜோதி ஒழிவாய் நிறைந்த சோபித சுபனந்தனில்
சீதேவி எனப்புகுந்த சித்தி நிஸ்வான் ஃபாத்திமத்தே

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

காத்தமுன் நபி தமக்கும் கண்மணி ஹசன் ஹூசைன்கும்
ஃபாத்திமா அலிஅவர்க்கும் படைத்தோன் ரஹ்மத்துண்டாம்
காதிம் உதுமான் எமக்கும் கைரான தாய் தந்தைக்கும்
ஏற்றமுள்ள லிகா ஜன்னத்தருள் யா அர்ஹமர்ராஹிமீனே!

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

அல்ஹம்துலில்லாஹி ஹம்தந் தாயிமன் அபதா
வல்ஹம்துலில்லாஹி தும்மல்ஹம்துலில்லாஹி
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன அலா
மாகான யுல்ஹிமுனி அல்ஹம்துலில்லாஹி

மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.