Posted by : kayalislam
Tuesday, 13 December 2011
ஸலாத்துன் வ தஸ்லீமுன் வ அஜ்கா தஹிய்யதீ யாரஸுலல்லாஹ்
அலல் முஸ்தஃபல் முக்தாரி கைருல் பரிய்யதீ யா ஹபீபல்லாஹ்
( ஸலாத்துன் )
நீங்களில்லையேல் நாங்களில்லையே நாயனின் தூதே யாரஸுலல்லாஹ்
பூக்கள் வாசமே எங்கள் சுவாசமே ஜீவ நேசமே யா ஹபீபல்லாஹ்
( ஸலாத்துன் )
ஹீராவெனும் குகையதிலே தவமிருந்தீரே யாரஸுலல்லாஹ்
பேராளனின் வேதமாமறை ஏந்தி வந்தீரே யா ஹபீபல்லாஹ்
( ஸலாத்துன் )
தாயிஃபெனும் மாநகரிலே தந்த தொல்லைகள் யாரஸுலல்லாஹ்
தங்கமேனியாம் தாஹாவே நீர் தாங்கிக் கொண்டீரே யா ஹபீபல்லாஹ்
( ஸலாத்துன் )
கோடான கோடி மாந்தரினம் சீராகவே யாரஸுலல்லாஹ்
பாராள வேந்தன் பரிசாகவே உம்மைத் தந்தானே யா ஹபீபல்லாஹ்
( ஸலாத்துன் )
பாவக் கேடுகள் உங்கள் பார்வையால் பறந்தோடவே யாரஸுலல்லாஹ்
கருணையாகவே காந்த விழிகளால் காத்தருள்வீரே யா ஹபீபல்லாஹ்
( ஸலாத்துன் )
துன்பமேதுமே தீண்டிடாமலே நீதி நாளிலே யாரஸுலல்லாஹ்
வாகை காணவே வாஞ்சையாகவே சுவனம் சேர்ப்பீரே யா ஹபீபல்லாஹ்
ஸலாத்துன் வதஸ்லீமுன் வஅஜ்கா தஹிய்யதீ யாரஸுலல்லாஹ்
அலல் முஸ்தஃபல் முக்தாரி கைருல் பரிய்யதீ யா ஹபீபல்லாஹ்