Posted by : kayalislam
Tuesday, 20 December 2011
ஏகோனின் ஒளி நீரே! - ஏந்தல் இரஸூல் நீரே!
யா ஹபீபே! யா ரஸூலே! - ஏக வல்லோனின் மஹ்பூபே!
( ஏகோனின் ஒளி நீரே )
மெஞ்ஞானக் கடல் நீரே! - மேலோனின் அருட் சுடரே!
தங்கள் அருளான திருக்காட்சி - அனுதினமும் அளிப்பீரே!
மெஞ்ஞானக் காதலெனும் - தங்கள் மேலான பேரமுதை
அருட்கொடையாய் அனைவருக்கும் - அளித்திடுவீர் கண்மனியே!
( ஏகோனின் ஒளி நீரே )
அழியாத காதலென்னும் - தங்கள் இஷ்கே ஹகீகீயை
அடியார்க்கு அருள் புரிந்து - அதிலேயே அழித்திடுங்கள்
நான் என்னும் பெரு நோயை - வேரோடு களைந் தெறிவீர்
யா ஹபீபே! யா ரஸூலே! - ஏக வல்லோனின் மஹ்பூபே!
( ஏகோனின் ஒளி நீரே )
பார்க்கும் இடங்களெல்லாம் - அல்லாஹ்வின் அருளென்னும்
தங்கள் மேலான தரிசனத்தை - அருளுங்கள் நாயகமே!
ஆனையாத தீபம் என்னும் - பேரொளியில் இணைத்திடுவீர்.
யா ஹபீபே! யா ரஸூலே! - ஏக வல்லோனின் மஹ்பூபே!
( ஏகோனின் ஒளி நீரே )