Posted by : kayalislam
Tuesday, 13 December 2011
அண்ணல் உங்கள் அன்பு முகம் காண நாடி வந்தோம்
கண்டதிலே எம்முயிரை அழிக்க வேண்டி வந்தோம்
கண்மணியே! பொன் மனியே! எம் நபியே!
எம்மிறையோன் இன்னருளால் பாரில் நீரும் வந்தீர்
பாலகராம் எம்மவர்க்கு பாலமுதும் தந்தீர்
தேனின் சுவை தென்றலென தேன்மலராய் மணந்தீர்
இங்கே தேடி வந்த எம் நெஞ்சில் தீபமென மிளிர்வீர்
சூழ்ந்த அருள் ஜோதியென ககனமீதில் பிறந்தீர்
ஹாஷிம் குல காஸிமென காசினியில் உதித்தீர்
மலரை தேடும் வண்டினம் போல் ரீங்கரித்து வந்தோம்
தேன் சுவையை ஊட்டி எம்மின் ஞானக்கண்ணை திறப்பீர்
உதடுகளும் உள்ளங்களும் ஒன்றிணைந்து சொல்லும்
உயரிய நும் முஹம்மதிலே கரைந்துருகும் கல்லும்
மல்லிகையோ இரத்தினமோ அழகு மிளிர் பற்கள்
அதை எழுதிடவோ சொல்லிடவோ இல்லை எங்கும் சொற்கள்
ஊனிழந்து உயிரிழந்து போகும் அந்த வேளை
ஆருயிரே அஹ்மதுங்கள் அருள் முகமே தேவை
அணல் தனிக்க அம்மையிலும் நும் நிழலில் நின்றே
அருள் மிகவே பெற்றிடவே வரம் வேண்டி நின்றோம்
எங்கள் ஈமான் காமிலாக கண்மனி எம் நபியே! உங்கள்
முஹப்பத் தென்னும் ஜோதி தன்னை எம்மின் கல்பில் விதைப்பீர்
உடல் பொருள் ஆவி யெல்லாம் உம்மின் பாதம் தந்தோம்
அந்த மில்லா நும் வஜ்ஹில் அடியவரை அழிப்பீர்
உங்கள் திரு வதனம் தன்னை ஏழை நாங்கள் காண
உள்ளங்களும் உதடுகளும் ஏங்குறதே நபியே!
தங்கள் அண்மை தேடி வர நாங்கள் இருக்கும் எம்மை
அரவணைத்து அழைத்து செல்வீர் ஏந்தல் எங்கள் நபியே!