Posted by : kayalislam
Saturday, 24 November 2012
நெஞ்சம் உருகுதய்யா
நெஞ்சம் உருகுதய்யா
நீதியில்லா கர்பலாவை நினைக்கும் தோறும்
நெஞ்சம் உருகுதய்யா
பண்புறும் ஃபாதிமா பாலர் ஹூஸைனை
பாவிகள் கொன்றனரே அதை நினைத்தால்
நெஞ்சம் உருகுதய்யா
கொடியோன் யஜீது முடியாட்சி தம்மை
அமைத்திட வேதான் முயன்றானவன்
இதமான சூழ்சியாவுமே செய்து
தீமையை நாட்ட முனைந்தானவன்
அதை நினைத்தால் நெஞ்சம் உருகுதய்யா
இதமான மக்களின் ஜனநாயகம் வாழ
இமாம் ஹூஸைன் தான் முனைந்தார்களே
இதயத்தில் ஈரம் மிகவும் நிறைந்த
முன்னூற்று பதிமூன்று தீனோருடன்
கர்பலா போரில் மாண்டார்களே
அதை நினைத்தால் நெஞ்சம் உருகுதய்யா
தாகம் தணிந்திட புராத் நதிநீரை
தடுத்தார்களே கொடியோர் கெடுத்தார்களே
கோபம் இல்லாமல் போர்புரிந்தார்களே
சிந்தை கலங்காமல் தீனோர்களே
ஈரம் நிறைந்த தீனோர்களே
அதை நினைத்தால் நெஞ்சம் உருகுதய்யா
ஒன்றே குலம் என்று பாடுவோம்
இறைவனாம் மறையோன் தனைவணங்கி
ஏற்புடையோர் என்றே பேர் எடுத்து
தீனோர்குல மெல்லாம் தழைக்க
குன்றாமல் சேவை செய்வோர்