Posted by : kayalislam
Sunday, 18 November 2012
வரலாற்றில் ஓர் சோகம்
வரலாற்றில் ஓர் சோகம்
வரைந் திருப்பதை காண்பீரே
கண்கள் என்றும் கரையுதம்மா – உயர்
கர்பலா நினைவாலே
மாவீரர் அலி பாத்திமா
மகிழ் வாழ்க்கை சோலையிலே
மாநபி திருபேரர்களாய்
மலர்ந்தார்கள் ஹஸன் ஹுஸைனார்
தீனென்னும் பயிர்தமக்கு
திருவானமழையானோர்
( கண்கள் )
கூஃபாவின்வீதி யெங்கும்
ஜனநாயகம் தழைத் தோங்க
கூடியே அழைத்திடவே
ஹுஸைனாரும்ஏகியிங்கே
போராடியே உயிர் நீத்த
தியாகத்தை கேட்கையிலே
( கண்கள் )
பகை சூழ்ந்த கர்பலாவில்
பணிப் போரங்கு நடக்கையிலே
படுபாவி ஷிம்ரென்போன் அவர்
சிரசினை வெட்டியதால்
அல்லாஹு அக்பர் என்றே
ஹுஸைனாரும் மறைந்தாரே
( கண்கள் )