Posted by : kayalislam
Tuesday, 15 May 2012
நம்மைப் போன்ற மனிதரென்று நாயகத்தை எண்ணாதே
பொய்யும் உண்மையும் நன்மையையும்
தீமையும் பொதுவென்று சொல்லாதே
அல்லாஹ்வின் தூதரை நீ அறியாமல் பேசாதே
நாவாலே நீ பேசி நரகத்தை வாங்காதே
தண்ணீரும் பன்னீரும் சமமாக முடியாது பன்னீரின்
வாசமெல்லாம் தண்ணீரில் கிடையாது
கண்ணீரும் கடல் நீரும் கரிப்பது தான் என்றாலும்
கண்ணீரின் துளிகளிலே கப்பல்கள் ஓடாது
அன்னையும் பெண்தானே அவளைப் போல் அமுதூட்ட
கண்ணிப் பொண் நினைத்தாலும் கதை இங்கு நடக்காது
கள்ளிப் பூ யினம் தான் காண்பதற்கு அழகே தான்
மல்லிகை போல் சூடெ என்றால் மனைவிக்கு பிடிக்காது
எழுத்தெல்லாம் குர்ஆனின் எழுத்தாக முடியாது
புழுவெல்லாம் வண்ணத்து பூச்சி என மாறாது
கல்லெல்லாம் ஹஜருல் அஸ்வத் கல்லாக ஆகாது
வில்லெல்லாம் வானத்து வில்லாக நடக்காது
மூளையும் அங்கம் தான் முடியும் ஓர் அங்கம் தான்
மூளையின் செயலெல்லாம் முடியால் செய்ய முடியாது
நம் வீட்டு கிணற்றிலே ஜம்ஜம் நீர் சுரக்காது
நமதூரின் மஸ்ஜிதெல்லாம் நபவி போல் சிறக்காது
நபித் தோழர் கூட ஒரு நபியாக முடியாது
அபூபக்கர் தோழரைப் போல் ஆகி விட முடியாது
நபியவர்கள் காலம் போல் நம் காலம் சிறக்காது
நபி ஸஹாபி என்ற பெயர் நம் தோழர்களுக்கேது
உம்மி நபி மனைவியர்கள் உம்மஹாத்துல் முஃ மினீன்கள்
நம்மவரின் மனைவியோ நாம் இறந்தால் மணப்பெண்கள்
பண்பு நபி குடும்பத்தை பரிசுத்தம் ஆக்கி வைத்தான்
பின் தொடரும் நமக்கெல்லாம் பேரிறைவன் என்ன தந்தான்
கலிமாவின் முஹம்மதென்னும் கருப் பொருளை நீக்கி விட்டு
இழிந்தவனே உன் பெயரை இணைத்திருக்க முடியாது
முன்கர் நகீர் கபுரிலே மூர்க்கத்துடன் வரும் போது
அண்ணலைப் போல் நானென்று அலட்டி நிற்க முடியாது
உன் புதிய வாதமிதை உமர் கத்தாப் கேட்டிருந்தால்
தன் வாளால் உன் தலையை சீவி முடித்திருப்பார்
அலி புலியார் உன் வழக்குக்கு அதிசயமாய் தீர்ப்பு வைப்பார்
கலி சால அபூஜஹிலாய் கஃபு உன்னை வர்ணிப்பார்