Posted by : kayalislam
Tuesday, 15 May 2012
அழைத்திங்கே கூட்டிவாருங்கள்
ஜிபுரீலேமீக்காயிலே போய் அழைத்திங்கே கூட்டிவாருங்கள்
( அழைத்திங்கே )
தழைத்தோங்கும் மக்காவாழும்
தாஹாமுஹம்மதுவை
சங்கைஸபா மருவாஹ்
சைலமும் வானோரேபோய் அழைத்திங்கே கூட்டிவாருங்கள்
( அழைத்திங்கே )
தையல் உம்முஹானிய்யார்
தன்வளவிற்றுயிலும்
செய்யிதஹுமதுபால்
தாமதியாது சென்று அழைத்திங்கே கூட்டிவாருங்கள்
( அழைத்திங்கே )
உதிக்கும் புராக்கிலேறி
உயர்வட்டக் கல்லிலேறி
மதிக்கும்பொன் ஏணிலேறி
மேலேழு வானிலேறி அழைத்திங்கே கூட்டிவாருங்கள்
( அழைத்திங்கே )
தூர்ஸினாவின்பின் மூசா
துடர்ந்தென்னை சந்தித்தார்
வருசை முஹம்மதுவை
வாகாய் கபுஷூடனே அழைத்திங்கே கூட்டிவாருங்கள்
( அழைத்திங்கே )
அர்ஷின் தலங்கடந்து
அடுக்காம் திரைநடந்து
முர்ஸல் முஹம்மதுவென்
முன்வந்து காண்பதற்காய் அழைத்திங்கே கூட்டிவாருங்கள்
( அழைத்திங்கே )
படிஎங்கும் தீன்விளக்கும்
பர்ழாம் நமாஜுநோன்பும்
அடைவின் படியுதவும்
ஆசை கொண்டேனதனால் அழைத்திங்கே கூட்டிவாருங்கள்
( அழைத்திங்கே )