Posted by : kayalislam Tuesday, 20 September 2011


கருணை நபி மீது காதல் கொண்டேன் நான்
காதல் கொண்டேன்.
கற்பனையில் ஒரு கனவு கண்டேன் - கனவில்
காவலன் தூதரை பார்த்து நின்றேன்.
அர்ப்பணம் என்னையே செய்து கொண்டேன்
அவர் அழகினில் அனைத்தையும் மறந்து நின்றேன்

சுவனத்தின் நிலவொன்றின் வரவைக் கண்டேன் அது
சுந்தரர் நபியென்று புரிந்துக் கொண்டேன்
சொல்ல முடியாத ஒரு இன்பம் கண்டேன் - நான் அதை
சுமக்க முடியாமல் நினைவிழந்தேன்

மதீனாவின் தெரு ஒன்றில் நடந்து சென்றேன் (கனவில்)
அங்கு மன்னர் முஹம்மதுவின் வரவைக் கண்டேன்
அண்ணலே என் அண்ணலே என அழைத்து நின்றேன்
அவரின் அழகினில் என்னை அழித்துக் கொண்டேன்

நான் செய்த பாவத்தை நானே கண்டேன்
நரகின் வேதனையை யெண்ணி நடுங்கி நின்றேன்
நாதியில்லாத ஒரு நிலையைக் கண்டேன்
நபி நாதரின் பாதத்தை பிடித்துக் கொண்டேன்

எம் பெருமான் எழில் இலங்க கண்டேன்
அதில் இணையற்ற பேரொளிவு துலங்க கண்டேன்
சொந்த அடிமை என்றே மனம் இறங்கி
திருக்கரம் உயர்த்தி என்னை வாழ்த்த கண்டேன்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.