Posted by : kayalislam Sunday, 25 September 2011

எம்மை அழைத்திடுங்கள் யாரஸுலல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாஹபீபல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாரஸுலல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாஹபீபல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாரஸுலல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாஹபீபல்லாஹ்
புனிதம் பூக்கும் உங்கள் மாமதீனா நாடி வருவேனே
புனிதம் பூக்கும் உங்கள் மாமதீனா நாடி வருவேனே
உவந்தே பாடி உங்கள் பேரன்பைநான் விழைந்தே வருவேனே
                                                                                                                                              ( எம்மை அழைத்திடுங்கள் )

சித்தீக்கு நாயகமே மானலிடம் பரிந்துரைப்பீரே !
சித்தீக்கு நாயகமே மானலிடம் பரிந்துரைப்பீரே !
சித்தீக்கு நாயகமே மானலிடம் பரிந்துரைப்பீரே !
தங்கள் மகளான அன்னை ஆயிஷாவின் இல்லம் வருவேனே
தங்கள் மகளான அன்னை ஆயிஷாவின் இல்லம் வருவேனே
திங்கள் நபிநாதரின் திருபூ முகம் நான் காண வருவேனே
                                                                                                                                              ( எம்மை அழைத்திடுங்கள் )

வீரம் செறிந்தோரே நபிகள் தோழரே உயர் சிங்கமே உமரே !
வீரம் செறிந்தோரே நபிகள் தோழரே உயர் சிங்கமே உமரே !
வீரம் செறிந்தோரே நபிகள் தோழரே உயர் சிங்கமே உமரே !
விரைந்தே நானுமங்கு ஏகி நபிகள் எழில் முகம் காணவே
விரைந்தே நானுமங்கு ஏகி நபிகள் எழில் முகம் காணவே
வள்ளல் பெருமானிடமே பாவி எமக்கு பரிந்துரை செய்வீரே
                                                                                                                                              ( எம்மை அழைத்திடுங்கள் )

அண்ணனல் மஹ்மூதரே என் நெஞ்சம் ஆளும் ஹாத்தமுன்நபியே !
அண்ணனல் மஹ்மூதரே என் நெஞ்சம் ஆளும் ஹாத்தமுன்நபியே !
அண்ணனல் மஹ்மூதரே என் நெஞ்சம் ஆளும் ஹாத்தமுன்நபியே !
அருள் தவழ்ந்தாடும் உங்கள் சாந்தவதனம் பார்ப்பதும் என்னாளோ
அருள் தவழ்ந்தாடும் உங்கள் சாந்தவதனம் பார்ப்பதும் என்னாளோ
கண்ணாலே காதலாய் யாம் காணவேண்டும் அழைத்திடுவீர்களே
                                                                                                                                              ( எம்மை அழைத்திடுங்கள் )

எம்மை அழைத்திடுங்கள் யாரஸுலல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாஹபீபல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாரஸுலல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாஹபீபல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாரஸுலல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யாஹபீபல்லாஹ்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.