Posted by : kayalislam Tuesday, 23 October 2012


மதீனத்து பட்டணமே.. அன்று பிணியின் பட்டணமே
மக்கள் அனைவரும் வருந்தும் அக்கணமே
எங்கள் கண்மணியின் வருகையாலே குளிர்ந்ததுவே செழிர்ந்ததுவே
ஒளிர்ந்ததுவே … இன்றும் ஒளியின் பட்டணமே…

அன்சாரிகள் மட்டில்லா மகிழ்ச்சியில் திளைத்த வண்ணம்
எழில் வதனத்தில் தங்கள் பார்வை வீசி
பாலைவனத்தில் அருள் பொங்க… ஆதரித்தே அரவணைத்தே
ஆற தழுவி கொஞ்சினரே... நாயகமே...

மனம் பொங்கி பாடினறே... எம் மேல் உதித்த வெண்மதியே
விதி நாளில் நீங்கள் தாம் எம் கதியே
இம்மி அளவேனும் தங்களை யாம் பிரிந்தோமோ... வாடினோமே
வதங்கிநோமே துவண்டோமே... காவலரே...

ஐந்தூண்கள் நீர் சொல்லி தந்தீரே கோமானே
உங்கள் மீது காதல் எனும் அஸ்திவாரமே
இல்லாமல் ஒரு தூணேணும் இயன்றிடுமோ பூமானே சீமானே
காதலிலே அழைத்தோமே... இறை தூதே

நபி அவையில் அலை அலையாய் முத்து மணி வார்த்தைகளை
தோழர்களோ எழுதினார்கள் நெஞ்சத்திலே
இறை மறையின் ஆயத்தினை எடுத்துரைக்கும் வாக்கியமோ
சட்டங்களோ திட்டங்களோ போதகங்களோ
இதயத்திலே அள்ளினோமே... அண்ணலரே

மரம் மலையும் விண்மீனும் வெண் பவள ரத்தினமும்
கால் நடையும் வாடிவிடும் உமை காணாவிடில்
இன்று மனிதர்களோ மறந்தனரே தொழுதனரே விழுந்தனரே
பூவில்லா நாறு தானோ நாயகமே...

கஸ்தூரி தேகத்தினை சுமக்கும் உங்கள் காலனியை
நொடியேனும் நான் சுமப்பேனோ நாயகமே
தங்கள் பூ பாதம் முத்தமிட நாடுகிறேன் ஏங்குகிறேன்
முத்தமிட்டே முத்தமிட்டே நான் மணக்கின்றேன்

தங்கள் புன்னகையை நாடியே நான் கண்மூடும் நித்திரையில்
என் பார்வையில் நீர் உதிப்பீரோ கண்மணியே
புனித முகம் பார்த்தே முத்தமிட்டே மனம் குளிர்ந்தே உயிர் விடுவேன்
"பயணம் வென்றே சுவனம் வருவேன்... யா ரசூலே..
எங்கள் யா ஹபீபே…"


                                                                                     by
                                                                                                  Al-Hafiz Seyed Ismail MAC


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.