Posted by : kayalislam
Monday, 29 October 2012
நபியே எனக்கு ஒரு வரம் வேண்டும்
நேசர் உங்கள் நெஞ்சில் இடம் தர வேண்டும்
மதியே எனக்கு கொஞ்சம் ஒளிவேண்டும்
( நபியே )
மாசில்லா வழி அருளத் தான் வேண்டும்
அவ்வலும் ஆஹிரும் நபி ஆனோரே
உள்ளமும் உரமும் ஒளி தருவோரே
அருளே ரஹ்மத்துல் லில் ஆலமீனே
அடிமை எனைக் காக்கும் பெருமானே
கரமே தர வேண்டும் காத்திட வர வேண்டும்
காலமும் துணை வேண்டும்
காரிருளை நீக்க வந்த கோமானே
( நபியே )
நாயகன் நாடி உம்மைத் தந்தானே
நானிலம் கூடி நன்மை பெறத்தானே
தாயகமான எங்கள் திருத்தூதே
தாங்களே ஆள வேண்டும் எனை இங்கே
துன்பங்கள் ஓடி விடும் இன்பங்கள் தேடி வரும்
நன்மைகள் கோடித் தரும்
நாதர் உங்கள் திரு முகம் நான் காண வேண்டும்
( நபியே )
மதீனம் ஓடி நானும் வர வேண்டும்
மகிமை கோடி நானும் பெற வேண்டும்
துதிகள் பாடி சுவனம் புக வேண்டும்
தூயவன் தூதே உங்கள் சன்னிதானம்
நெஞ்சங்கள் புகழ் பாடும் நேசங்கள் குடை சூடும்
விண்ணகமும் வரத் தேடும் வேந்தர் உங்கள்
இருப்பிடம் தான் தர வேண்டும்
( நபியே )
மன்னர் என் மரண வேலை வர வேண்டும்
மகத்துவ திருக் கலிமா தர வேண்டும்
மன்னரே மஹ்ஷரிலும் வர வேண்டும்
மாபெரும் துயர் துடைத்து விட வேண்டும்
கவ்தரில் வர வேண்டும் கரம் அள்ளித் தர வேண்டும்
ஹம்தினில் நிழல் வேண்டும்
காருன்யர் கரையும் சேர்த்து விட வேண்டும்
( நபியே )