Posted by : kayalislam Sunday, 29 July 2012




விழி நீர் மல்க கரங்களை ஏந்தி
வேண்டுகிறோமே பெருமானே
அருளால் உங்கள் அடியவர் எம்மை
அணைத்தருள் புரிவீர் எம்மானே

பாதமில்லாது வாணிலே தவழும்
பரிதியும் நானும் நும் அழகில்
பகல் இரவெல்லாம் பார்த்தகம் குளிர்ந்து
பருகிட அமுதம் தருவீரே

ஆதரவின்றி அடியவர் நாங்கள்
அடைக்கலம் தேடி அலைந்திடும் நாள்
ஆதியின் தூதே ஜோதியின் உருவே
தஞ்சமருள்வீர் தாஸீமே

ஜகந்தனில் ஜனித்து கபன் தனில் புகுந்து
கபுரினை நோக்கும் தருணமதில்
தாமதமின்றி தாங்களே வந்து
தனிமையை போக்கும் ஹாமீமே

மதியினை இழந்து மானிடர் நாங்கள்
ஆற்றிய பாவப் பிழை நீக்கி
பாதைகள் மாறி பறந்திடாதெம்மை
பரிவுடன் காப்பீர் ஃபஹீமே

இனித்திடும் சொல்லில் கணத்திடும் கல்லும்
கரைந்திடும் வண்ணம் நும் வதனம்
வாசல் வந்தோமே வறியவர் நாங்கள்
யாசகம் தருவீர் யாஸீனே

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.