Posted by : kayalislam
Thursday, 26 July 2012
யா ஹபீபே யா ரஸூலல்லாஹ் - யா ஹபீபே யா ரஸூலல்லாஹ்
எங்கள் இரு உலகின் பெருந்துணையே - இதயங்கமல் நறு மணமே
தாங்கள் இருக்கும் இடத்தில் இறை வேதனை இறங்காது
என்ற ஓங்கும் திரு மறையின் கூற்று என்றும் அழியாது
வேதனைகள் தீர்க்கும் நபி யா ரஸூலல்லாஹ்
எந்த சாதனைக்கும் தாங்கள் தான் யா ரஸூலல்லாஹ்
நம்மோடு அல்லாஹ் இருக்கின்றான் பயம் விடுப்பீரே
என்று நம்பி வந்த தோழருக்கு நயம் உரைத்தீரே
அபூபக்கர் உடன் இருந்தீர் யா ரஸூலல்லாஹ்
தவ்ரில் அண்டி வந்த ஆபத்தெங்கே யா ரஸூலல்லாஹ்
பாவி எந்தன் ஒரு கையில் தங்கள் முந்தானை
கிடைத்தால் ஓடி வரும் இரு உலகம் எந்தன் பின்னாலே
ஆலங்களின் அருட் கொடையே யா ரஸூலல்லாஹ்
தாங்கள் அருகிருந்தால் போதும் எனக்கு யா ரஸூலல்லாஹ்
அருகிருந்து மரண வேலை அரவணைப்பீரே
தாங்கள் திரு முகத்தை கப்ரில் காட்டி ஒளி கொடுப்பீரே
மஹ்ஷறிலும் பரிந்துரைப்பீர் யா ரஸூலல்லாஹ்
இனிக்க சுவனத்திலும் உடன் இருப்பீர் யா ரஸூலல்லாஹ்