வான்மறை புகழ்ந்திடும் முஹம்மத் முஸ்தபா
யா ரஸூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ்
யா ஷபீயல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்
வான்மறை புகழ்ந்திடும் முஹம்மத் முஸ்தபா
இந்த வையமெங்கும் பேர் மணக்கும் வள்ளல் முஸ்தபா
( யா ரஸூலல்லாஹ் )
பாலை மக்க நாடு தந்த யா ரஸூலல்லாஹ் - சொர்க்கப்
பாவை பாத்திமாவை ஈந்த யா ரஸூலல்லாஹ்
சோலைக் காற்றின் சொல்லுதிர்க்கும் யா ரஸூலல்லாஹ் - சொக்கத்
தங்கம் போன்ற சற்குணத்தின் யா ரஸூலல்லாஹ்
எந்த நாளுமே உங்கள் இனிய மாண்பையே
எங்கள் சிந்தை மீது ஏந்தி நாங்கள் சிந்து பாடுவோம்
( யா ரஸூலல்லாஹ் )
மேகங் கூடி குடை பிடிக்கும் யா ரஸூலல்லாஹ் - துங்க
மேனியில் கஸ்தூரி வீசும் யா ரஸூலல்லாஹ்
தாகந் தீர்க்க விரலினின்றும் யா ரஸூலல்லாஹ் - அன்று
தன்மையான நீரளித்த யா ரஸூலல்லாஹ்
எந்த நாளுமே உங்கள் இனிய மாண்பையே
எங்கள் சிந்தை மீது ஏந்தி நாங்கள் சிந்து பாடுவோம்
( யா ரஸூலல்லாஹ் )
இறைவன் ஏகன் என நவின்ற யா ரஸூலுலல்லாஹ் - அந்த
இனையில்லானை வணங்கச் சொன்ன யா ரஸூலுலல்லாஹ்
முறை வகுத்து வாழச் செய்த யா ரஸூலுலல்லாஹ் - அந்த
மறுமை நாளில் எம்மை மீட்கும் யா ரஸூலுலல்லாஹ்
எந்த நாளுமே உங்கள் இனிய மாண்பையே
எங்கள் சிந்தை மீது ஏந்தி நாங்கள் சிந்து பாடுவோம்
( யா ரஸூலல்லாஹ் )
வசை மொழிந்த பகைவருக்கும் யா ரஸூலுலல்லாஹ் - மிக்க
உவகையோடு உதவி நின்ற யா ரஸூலுலல்லாஹ்
திசை மறந்த களங்கள் நாங்கள் யா ரஸூலுலல்லாஹ் - எம்மைத்
துறையில் கொண்டு சேர்க்க வேணும் யா ரஸூலுலல்லாஹ்
எந்த நாளுமே உங்கள் இனிய மாண்பையே
எங்கள் சிந்தை மீது ஏந்தி நாங்கள் சிந்து பாடுவோம்
( யா ரஸூலல்லாஹ் )
விழி நீர் மல்க வேண்டுகிறோமே பெருமானே
விழி நீர் மல்க கரங்களை ஏந்தி
வேண்டுகிறோமே பெருமானே
அருளால் உங்கள் அடியவர் எம்மை
அணைத்தருள் புரிவீர் எம்மானே
பாதமில்லாது வாணிலே தவழும்
பரிதியும் நானும் நும் அழகில்
பகல் இரவெல்லாம் பார்த்தகம் குளிர்ந்து
பருகிட அமுதம் தருவீரே
ஆதரவின்றி அடியவர் நாங்கள்
அடைக்கலம் தேடி அலைந்திடும் நாள்
ஆதியின் தூதே ஜோதியின் உருவே
தஞ்சமருள்வீர் தாஸீமே
ஜகந்தனில் ஜனித்து கபன் தனில் புகுந்து
கபுரினை நோக்கும் தருணமதில்
தாமதமின்றி தாங்களே வந்து
தனிமையை போக்கும் ஹாமீமே
மதியினை இழந்து மானிடர் நாங்கள்
ஆற்றிய பாவப் பிழை நீக்கி
பாதைகள் மாறி பறந்திடாதெம்மை
பரிவுடன் காப்பீர் ஃபஹீமே
இனித்திடும் சொல்லில் கணத்திடும் கல்லும்
கரைந்திடும் வண்ணம் நும் வதனம்
வாசல் வந்தோமே வறியவர் நாங்கள்
யாசகம் தருவீர் யாஸீனே
ஆதாரம் தாரும் அல்லாஹ்வின் நேசரே!
ஆதாரம் தாரும் அல்லாஹ்வின் நேசரே!
அழைப்பவர் குரலை கேட்பவர் நீரே
அழைக்கின்றோம் அதனால் ஆதரிப்பீரே
கதி யாரும் இல்லை நபி யா ரஸூலே
அண்ணலே உங்கள் உம்மத்தோர் என்னும் …
உரிமை கொண்டாடும் உவகையில் ஆழ்ந்தோம்
உத்தமரே உமது நெறி முறை கடந்தோம்
உல்லாச வாழ்வில் அல்லாஹ்வை மறந்தோம்
உல்லாச வாழ்வில் அல்லாஹ்வை மறந்தோம்
நில்லாது போவதை நிலையாக நினைத்தோம்
வல்லோனின் தூதரே வழி காட்டுவீரே
கதி யாரும் இல்லை நபி யா ரஸூலே
திருந்தாமல் வாழ்வில் தீமைகள் செய்தோம்…
தீர்ப்பு சொல்லும் நாளை தேடாமல் மறந்தோம்
திரை நீங்கி உண்மை தெளிவாகும் அன்று
பரிந்துரை செய்து துணை கரம் நீட்டும்
பரிந்துரை செய்து துணை கரம் நீட்டும்
நீர் இல்லை என்றால் அங்கு நிலை என்ன வாகும்
நெறி வாழும் மதீனா பதி வாழும் நாதரே
கதி யாரும் இல்லை நபி யா ரஸூலே
எண்ணத்தில் எல்லாம் தன்னலம் பார்த்தோம்
இன்பத்தை தீயோர் வழியினில் ரசித்தோம்
இதயத்தை வீனோர் கரத்தினில் சேர்த்தோம்
எல்லாம் தெரிந்தும் ஏட்டினில் வாழ்ந்தோம்
எல்லாம் தெரிந்தும் ஏட்டினில் வாழ்ந்தோம்
சொல்லாது போகும் சுகத்தினில் ஆழ்ந்தோம்
பொல்லாத பாவ தீயினில் வீழ்ந்தோம்
கதி யாரும் இல்லை நபி யா ரஸூலே
எங்கள் இரு உலகின் பெருந்துணையே
யா ஹபீபே யா ரஸூலல்லாஹ் - யா ஹபீபே யா ரஸூலல்லாஹ்
எங்கள் இரு உலகின் பெருந்துணையே - இதயங்கமல் நறு மணமே
தாங்கள் இருக்கும் இடத்தில் இறை வேதனை இறங்காது
என்ற ஓங்கும் திரு மறையின் கூற்று என்றும் அழியாது
வேதனைகள் தீர்க்கும் நபி யா ரஸூலல்லாஹ்
எந்த சாதனைக்கும் தாங்கள் தான் யா ரஸூலல்லாஹ்
நம்மோடு அல்லாஹ் இருக்கின்றான் பயம் விடுப்பீரே
என்று நம்பி வந்த தோழருக்கு நயம் உரைத்தீரே
அபூபக்கர் உடன் இருந்தீர் யா ரஸூலல்லாஹ்
தவ்ரில் அண்டி வந்த ஆபத்தெங்கே யா ரஸூலல்லாஹ்
பாவி எந்தன் ஒரு கையில் தங்கள் முந்தானை
கிடைத்தால் ஓடி வரும் இரு உலகம் எந்தன் பின்னாலே
ஆலங்களின் அருட் கொடையே யா ரஸூலல்லாஹ்
தாங்கள் அருகிருந்தால் போதும் எனக்கு யா ரஸூலல்லாஹ்
அருகிருந்து மரண வேலை அரவணைப்பீரே
தாங்கள் திரு முகத்தை கப்ரில் காட்டி ஒளி கொடுப்பீரே
மஹ்ஷறிலும் பரிந்துரைப்பீர் யா ரஸூலல்லாஹ்
இனிக்க சுவனத்திலும் உடன் இருப்பீர் யா ரஸூலல்லாஹ்