Posted by : kayalislam
Sunday, 9 October 2011
மகிழ்ந்தே சொல்வோம் யாநபி
பணிந்தே அழைப்போம் யாநபி
சொல்வோம் யாநபி யாநபி யாநபி
( மகிழ்ந்தே சொல்வோம் யாநபி )
அருளாளன் அல்லாஹ்வின்
பேரருளாய் அவதரித்தீர்கள்
அகிலம் எங்கும் தீனின்
அருட்சுடரை ஏற்றினீர்களே
( மகிழ்ந்தே சொல்வோம் யாநபி )
நூராய் இலங்கும் இறையோன்
அவன் நபியாய் மகி ஜொலித்தீர்கள்
சீராய் ஜிப்ரீல் மூலம்
அருள் மறையை ஏந்தினீர்களே
( மகிழ்ந்தே சொல்வோம் யாநபி )
மலிந்தே கிடந்தது மடமை
அதை மாய்த்திடவே உழைத்தீர்கள்
துணிந்தே விளைத்தனர் கொடுமை
அதை பொறுமையுடன் சகித்தீர்களே
( மகிழ்ந்தே சொல்வோம் யாநபி )
இறைவன் அழைப்பினை ஏற்று
விண்ணுலகம் ஏகியே அங்கு
தனியோனை தனிமையிலே
விழி நேரில் கண்டீர்களே
( மகிழ்ந்தே சொல்வோம் யாநபி )
பகை கூடும் அந்த நாளில்
படைத்தோனின் விதி ஏற்றீர்கள்
வரலாறுகள் போற்றும் ஹிஜ்ரா
வழி நோகச் சென்றீர்களே
( மகிழ்ந்தே சொல்வோம் யாநபி )