Posted by : kayalislam Saturday, 22 October 2011


எங்கும் நிறைந்த இறையோனே
எல்லாம் அறிந்த பெரியோனே
உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்
உன்னிடம் உதவிகள் வேண்டுகின்றோம்
உன்னிடம் உதவிகள் வேண்டுகின்றோம்
யாஅல்லாஹ்! யாரஹ்மான்! யாரஹீம்!

உன்னைத் தவிர இறையில்லை
உனக்கே யாரும் இணையில்லை
மண்ணும் விண்ணும் உன் உடமை
மலரும் ஆட்சி உன் உரிமை
தனித்தே என்றும் நிலைத்தவனே
தாஹா நபியைத் தந்தவனே
ஆற்றல் எல்லாம் உரியவனே
அனைத்து புகழையும் உடையவனே
அனைத்து புகழையும் உடையவனே
                                                                                        (எங்கும் நிறைந்த)

எல்லா உலகையும் ஆழ்பவனே
நல்லார் நெஞ்சினில் நிறைந்தவனே
இல்லார் இதயம் குளிர்ந்திடவே
இனிதாய் அருளைச் சொரிந்திடுவாய்
இம்மை மறுமை நலனெல்லாம்
இறைவா எமக்கு வழங்கிடுவாய்
வெம்மை நெருப்பை விட்டெம்மை
விரைந்தே காப்பாய் தூயவனே
விரைந்தே காப்பாய் தூயவனே
                                                                                        (எங்கும் நிறைந்த)

உந்தன் வேதம் குர்ஆனை
உள்ளம் குளிர ஓதிடவும்
உன் திருத்தூதர் நபிவழியில்
உகப்பாய் நாளும் ஏகிடவும்
உண்மை அடியார் யாரிடமும்
உவகையுடன் நாம் பழகிடவும்
உன் அருள் இங்கு யாம் பெறவே
உள்ளம் விரும்பி வேண்டுகின்றோம்
உள்ளம் விரும்பி வேண்டுகின்றோம்
                                                                                        (எங்கும் நிறைந்த)

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாfபி கல்பி கைருல்லாஹ்
நூரே முஹம்மது ஸல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.