Posted by : kayalislam
Monday, 30 April 2012
உம்மை போன்ற மனிதரென்று எப்படி சொன்னாய்
மனிதா எப்படி சொன்னாய்
எங்கள் நபி நாயகத்தை ஏகன் திரு தூதர் தம்மை
உம்மை போன்ற மனிதரென்று எப்படி சொன்னாய்
உங்களைப் போல் நான் மனிதன் என்று நபி கூறியதன்
உள்அர்த்தம் விளங்காமல் உண்மை பொருள் புரியாமல்
உம்மை போன்ற மனிதரென்று எப்படி சொன்னாய்
மனிதா எப்படி சொன்னாய்
சொர்கத்தின் வாசலில் உன் பெயர் இருந்ததா?
ஒரு ஜோதியாக தந்தை நெற்றியில் ஜொலித்தாயா?
உன் வருகைப் பற்றி யாரும் சொல்லி வைத்தாரா?
இல்லை முன் வந்த வேதங்களில் உன் பெயர் இருந்ததா?
சுன்னத்து செய்த வண்ணம் நீ பிறந்தாயா?
இல்லை சுஜூதிலே பணிந்த வண்ணம் உலகு வந்தாயா?
உனக்காக பாரஸீக நெருப்பு அணைந்ததா?
மண்ணில் உறைந்திருந்த ஆறு நதி பெருக்கெடுத்ததா?
சூகையான தாய் மார்பு சுகம் அடைந்ததா?
பால் சுரந்த ஒரு மார்பில் மட்டும் பால் கொடுத்தாயா?
உன் நெஞ்சு இரண்டாக பிளக்கப்பட்டதா?
அதில் உள் வளரும் தீமை எல்லாம் அகற்றப்பட்டதா?
அல் அமீனே என்று மக்கள் பட்டம் தந்தாரா?
தினம் அசரீரி வாக்கியங்கள் காதில் கேட்டதா?
கண்மூடும் நேரம் உயர் கனவு வந்ததா?
அது காலையிலே பார்த்த போது பழித்திருந்ததா?
உம்மை போன்ற மனிதரென்று எப்படி சொன்னாய்
மனிதா எப்படி சொன்னாய்
எங்கள் நபி நாயகத்தை ஏகன் திரு தூதர் தம்மை
உம்மை போன்ற மனிதரென்று எப்படி சொன்னாய்
வானவர் ஜிப்ரீலு முன்னே வந்து நின்றாரா?
அவர் தனியாக உனக்கு ஏதும் சேதி சொன்னாரா?
குர்ஆனை முழுமையாக தெரியுமா?
அதன் குறியீட்டை கூட உன்னால் புரிய முடியுமா?
உம்மை போன்ற மனிதரென்று எப்படி சொன்னாய்
மனிதா எப்படி சொன்னாய்
எங்கள் நபி நாயகத்தை ஏகன் திரு தூதர் தம்மை
உம்மை போன்ற மனிதரென்று எப்படி சொன்னாய்
நபி பட்டம் வரும் முன்னே இவை நடந்தன
நபி நபியாக இன்றி இவை எப்படி நடந்தன?
நம்மைப் போன்ற மனிதருக்கு இவை நடக்குமா?
நீ நபியும் நானும் ஒன்று என்று கூற முடியுமா?