Posted by : kayalislam Friday, 22 July 2011


முஃமீன்களே! நீங்கள் அல்லாஹ்விடம் கலப்பற்ற தவ்பா செய்யுங்கள் என்று அல்லாஹ் அருள்மறையில் அருள்கிறான் .

தவ்பத்துன் நஸூஹா என்பது மற்ற அடியாருக்கு கொடுக்க கடமைபட் டிருப்பின்அதை முறையாக கொடுத்துவிட்டு உள்ளம் பச்சதாபப்பட்டு மனமுருகி அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவதாகும் .

  • இதன் நிபந்தனைகள் :
  1. தான் செய்த பாவத்தை நினைப்பது
  2. அதை நினைத்து மனமுருகுதல்
  3. இனி அந்த பாவத்தை செய்யமாட்டேன் என்று கொள்ளல் ஆகியன.
மிகுதமாக தவ்பா செய்பவர்களையும் பரிசுத்தவான்களையும் அல்லாஹ் நேசிக்கிறான் என்றும்

(நபியே!) பாவம் செய்து தங்கள் நப்ஸூகளின் பேரில் வரம்பு மீறியவர்களுக்கு , அல்லாஹ்வின் ரஹ்மத்தை விட்டும் நிராசையாகி விடவேண்டாம் என்று அடியார்களுக்கு சொல்லுங்கள் .
நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறான் . நிச்சயமாக அவனே மிக மன்னிப்பாளனும் கிருபையாளனுமாக இருகின்றான் என்று நீங்கள் சொல்லுங்கள் என்றும் அல்லாஹ் அனேக இடங்களில் தவ்பா செய்யும் படி ஏவியுள்ளான் .

  • தவ்பாவின் சிறப்பைப் பற்றி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது :
பாவத்தை விட்டும் (மன்னிப்பு தேடுபவன்) தவ்பா செய்பவன் பாவமில்லா பரிசுத்த மனிதனைப் போலாவான் .
மனிதன் மறதி , தவறு ஆகியவற்றால் பிணைக்கபட்டவன் . மனிதன் தவறு செய்வது இயற்க்கை ஆனால் அந்த தவறில் உழன்று கொண்டிருக்காமல் தன் தவறை நினைத்து மனம் வருந்தி அத்தவற்றினை விட்டும் திருந்தி நல்வழியை மேற்கொள்ளும்போது அவனுக்கு விருந்தும் கிடைக்கும் .
என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நற்செய்தி கூறியுள்ளார்கள் .

  • ஹழ்ரத் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு :
நபி மூசா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் காலத்தில் 99 கொலைகள் செய்த ஒரு பெரும்பாவி தனது பாவங்களுக்கு பரிகாரம் தேடி ஒரு அறிஞரை சந்தித்து தனது பாவத்திற்கு பரிகாரம் தேடியபோது , அவ்வறிஞர் , அக்கொலைக்காரனைப் பார்த்து உனக்கு தவ்பாவே கிடையாது என்று கூறியதும் ஆத்திரத்தில் அவ்வறிஞரையும் கொலை செய்து விட்டான் . இப்போது 100 கொலைகள் செய்து முடித்துவிட்ட அம்மனிதன் நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் இருப்பதாக கேள்விப்பட்டு அவர்களை தேடி செல்லும் வழியில் மரணித்து விட்டான் . அவனுடைய ரூஹை கொண்டு செல்லுவதில் ரஹ்மத்துடைய மலக்குமார்கள் அதாபுடைய மலக்குமார்கள் ஆகியோருக்கு மத்தியில் சர்ச்சை ஏற்பட்டு விட்டது . அப்போது அக்கொளைகாரன் தவ்பா செய்வதற்காக நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களை தேடி சென்ற தூரம் அதிகமா? அல்லது மேலும் செல்ல வேண்டிய தூரம் அதிகமா? என்று அளந்துப் பார்த்து ரூஹைக் கைப்பற்றி செல்லுமாறு அல்லாஹ் கட்டளையிட்ட போது அவன் தவ்பா செய்ய கடந்ததூரம் அதிகமாக இருந்ததால் ரஹ்மத்துடைய மலக்குமார்கள் அவனுடைய ரூஹை கைப்பற்றிச் சென்றார்கள் என வரலாற்றில் வருகிறது

எனவே தவ்பா செய்யும் சீதேவிகளுக்கு கிடைக்கும் சிறப்புக்களையும் , அந்தஸ்துக்களையும் , பாக்கியங்களையும் வரையறுத்து எழுத இயலாது .

அல்லாஹ் தனது ரஹ்மத்தை அருள் புரிந்த அடியாருக்கு ஒரு குறையுமில்லை .

வானம் , பூமி எங்கும் நிரம்பியிருக்கும் அல்லாஹ்வின் ரஹ்மத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றவர்களாகவும் , தவ்பாவைக் கொண்டு சுபசோபனம் பெற்றவர்களாகவும் , நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தை மிகுதமாக ஓதுவதால் அவர்களின் ஷஃபாஅத்தை பெற்றவர்களாகவும் நம்மை அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.